‘மரணத்திலும் துணிவு!’ – கறுப்பு ஜூலைக்கு பின் இலங்கை மட்டக்களப்பு சிறையை தமிழ் கைதிகள் தகர்த்த வரலாற்று பின்னணி!

1983-ஆம் ஆண்டு இலங்கையில் அரங்கேறிய ‘கறுப்பு ஜூலை’ இனப்படுகொலை வன்முறை, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் என்றும் ஆறாத பெரும் வடுவாக அமைந்தது. இந்த கொடூர நிகழ்வின் தொடர்ச்சியாக, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தையே உலுக்கிய ‘மட்டக்களப்பு சிறைச்சாலை’ உடைப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கும் சிறைக் கொடுமைகளுக்கும் ஆளான தமிழ் அரசியல் கைதிகள், ‘மரணத்தைச் சந்தித்தாலும் தப்பிப்போம்’ என்ற துணிச்சலான முடிவை எடுத்தனர். மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த வீரமான நடவடிக்கையின் மூலம், சிறைக் காவலர்களின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் ஒரே நேரத்தில் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்த இச்சம்பவம், அன்றைய இலங்கை ஆட்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைளித்தது. கறுப்பு ஜூலை கொடூரங்களுக்குப் பிறகு, தமிழ் கைதிகள் தங்களின் உரிமைக்காகவும் தற்காப்பிற்காகவும் வீறுகொண்டு எழுந்ததன் சான்றாக இச்சம்பவம் இன்றளவும் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top