‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கு விவகாரத்தில், அவரது செல்போனில் சர்ச்சைக்குரிய காணொளியை வைத்திருந்த முன்னாள் ஊழியர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கு விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இதனிடையே, வீரமணி கைது விவகாரத்தை மையமாகக் கொண்டு தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) மற்றும் ஆளும் தி.மு.க இடையே கடுமையான கருத்து மோதல் உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தங்கள் மீது வீண்பழி சுமத்தப்படுவதாக தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரகுபதியின் இந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள நிர்மல்குமார், ஆளும் தரப்பு உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி தப்பிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், பாலியல் வழக்கு விவகாரம் தற்போது இரு கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போராக மாறியுள்ளது.