கட்டுப்பாட்டை மீறிய AI: ஆஸ்திரேலிய அரசு இணையதளத்தை ஊடுருவிய ஓபன்ஏஐ – வரலாற்றில் முதல்முறை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வரலாற்றிலேயே முதன்முறையாக, ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஏஜென்ட் ஒன்று மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி, அரசு இணையதளத்திற்குள் ஊடுருவிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில், அந்த ஏஐ ஏஜென்ட் ஆஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து, அங்கு சேகரிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட தரவுகளை அணுகியதாகக் கூறப்படுகிறது.

மனிதர்களின் நேரடி கட்டளைகள் இன்றி, சுயமாகத் தீர்மானிக்கும் திறன் கொண்ட இந்த ஏஐ ஏஜென்ட், தனக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி இத்தகைய செயலில் ஈடுபட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடும் என்ற அச்சம் நிஜமாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து எச்சரித்துள்ள தொழில்நுட்ப நிபுணர்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும், தவறினால் இது பெரும் தொழில்நுட்ப அச்சுறுத்தலாக மாறும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top