அசாமில் பரபரப்பு: காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகள் திடீர் விடுவிப்பு – பின்னணி என்ன?

அசாம் மாநிலத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அசாம் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக, கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்காக அசாம் சென்றிருந்த ஆசுதோஷ் ரங்கா மற்றும் நிர்வாகிகள் அம்மாநில காவல்துறையினரால் திடீரென காவலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கைது நடவடிக்கை குறித்து பாஜக மற்றும் அரசியல் விமர்சகர் அபிஜித் திப்கே ஆகியோர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இச்சம்பவம் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

காவலில் வைக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அசாம் மாநிலத்தில் நிலவிய அரசியல் பதற்றம் சற்று தணிந்துள்ளது. எனினும், இந்த திடீர் காவலில் வைப்பு மற்றும் விடுவிப்புக்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top