செப்டம்பரிலும் பூக்கும் மேஃபிளவர்! இயற்கையின் கணக்கை மாற்றும் காலநிலை மாற்றம்: ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் உண்மை!

காலநிலை மாற்றத்தின் தாக்கம் தற்போது மனிதர்களை மட்டுமல்லாமல், இயற்கையின் அடிப்படை சுழற்சியையும் பெருமளவில் பாதிக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் மட்டுமே பூத்துக் குலுங்கும் மேஃபிளவர் மரங்கள், தற்போது செப்டம்பர் மாதத்திலும் பூக்கத் தொடங்கியுள்ளன. அதேபோல், குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும் கொடுக்காப்புளி போன்ற பழங்களும், சீசன் தாண்டி தற்போது தொடர்ந்து கிடைக்கத் தொடங்கியுள்ளன.

தாவரங்களின் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவ சுழற்சியில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்களுக்குப் புவி வெப்பமயமாதலும், சீரற்ற மழைப்பொழிவுமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இயற்கையின் இந்த மாறுபட்ட சுழற்சியை எதிர்கொள்ளவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு காலம் தவறி பூக்கும் தாவரங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது தற்போதைய அவசிய தேவையாக உருவெடுத்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய புதிய தாவர வகைகளை உற்பத்தி செய்வதும், அதுகுறித்த ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்துவதும் மிக முக்கியம் என இயற்கை ஆர்வலர்களும் தாவரவியல் வல்லுநர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top