துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட ‘ஃப்ளைதுபாய்’ பயணிகள் விமானம், எதிர்பாராதவிதமாக சௌதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தை இயக்கிய இரு விமானிகளுக்கு இடையே நடுவானில் ஏற்பட்ட திடீர் மோதலே இந்த அவசரத் தரையிறக்கத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, முதன்மை விமானிக்கும் உதவி விமானிக்கும் இடையே ஏற்பட்ட தீவிர வாக்குவாதம் மோதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருகிலிருந்த சௌதி அரேபிய விமான நிலையத்திற்கு விமானம் உடனடியாகத் திருப்பிவிடப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, அவர்களின் பயணத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நடுவானில் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து சண்டையிட்ட இரு விமானிகள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ‘ஃப்ளைதுபாய்’ விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது.