பருப்பு சாப்பிட்டால் வயிறு உப்புகிறதா? வாயுத்தொல்லையைத் தவிர்க்கும் எளிய வழிகள்!

நமது அன்றாட உணவில் பருப்பு மற்றும் பயறு வகைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடலுக்குத் தேவையான அதிக அளவிலான புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் தாது உப்புகள் இவற்றில் நிறைந்துள்ளன. 100 கிராம் பயறு வகைகளில் தோராயமாக 20 முதல் 24 கிராம் வரை புரதச்சத்து நிறைந்துள்ளது. இருப்பினும், பலருக்கு பருப்பு வகைகளைச் சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லை ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.

இதற்கு பயறு வகைகளில் உள்ள ‘ரஃபினோஸ்’ (Raffinose) என்ற கூட்டுச் சர்க்கரையே முக்கியக் காரணமாகும். இதனை நமது சிறுகுடலால் எளிதில் செரிக்க முடியாது. பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் இதனை நொதிக்க வைக்கும் போதுதான் அதிக அளவில் வாயு உருவாகிறது. இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, பயறுகளைச் சமைப்பதற்கு முன்பாக குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் நீரில் நன்கு ஊற வைக்க வேண்டும். மேலும், பருப்பு சமைக்கும் போது சீரகம், பெருங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துச் சமைத்தால் வாயுத்தொல்லையைக் கணிசமாகக் குறைத்து, செரிமானத்தை அதிகரிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top