நடுவானில் கொடூரம்: ‘கோடாரியால் தாக்கிய துணை விமானி’ – இந்திய கேப்டனின் சாதுரியத்தால் தப்பிய பயணிகள்!

இஸ்ரேல் நோக்கிப் பறந்துகொண்டிருந்த ‘ஃப்ளைதுபை’ பயணிகள் விமானத்தை நடுவானில் கடத்த முயன்ற துணை விமானியின் திடுக்கிடும் சதித்திட்டம் குறித்த புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தின் கட்டுப்பாட்டைத் தனது வசம் கொண்டுவர எண்ணிய துணை விமானி, காக்பிட்டில் இருந்த அவசரகாலக் கோடாரியால் முதன்மை விமானியான இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த போதிலும் மனஉறுதியை இழக்காத கேப்டன் ஸ்மித், சாதுரியமாகச் செயல்பட்டு காக்பிட் கதவைத் திறந்து சக பணியாளர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

துணை விமானியின் தீவிரத் தாக்குதலையும் மீறி, விமானத்தையும் அதில் இருந்த பயணிகள் அனைவரையும் இந்திய கேப்டன் தனது துணிச்சலான செயலால் பத்திரமாகக் காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்திய விமானியின் வீரத்தையும் சாதுரியத்தையும் உலகளவில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top