தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் பிரம்மாண்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், டெல்லியின் முக்கியப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய சாலைகள், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, டெல்லி முழுமையாகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சந்தேகத்திற்குரிய நபர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக தலைநகரின் முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லைகளில் தற்போது பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.