ரஷ்யாவுக்கு எதிராக சட்டம்… அடுத்த சில வாரங்களிலேயே டீசல் வாங்க டிரம்ப் திட்டம்: குவியும் எதிர்ப்புகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைச் சட்டத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களிலேயே, அந்நாட்டிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவில் நிலவும் எரிபொருள் தட்டச்சு மற்றும் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவே டிரம்ப் நிர்வாகம் இந்த அவசர முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு, இந்த டீசல் வர்த்தகம் மூலம் பெருமளவு நிதி சென்று சேரும் என்றும், இது உக்ரைன் போருக்கு அமெரிக்காவே மறைமுகமாக நிதி உதவி செய்வதற்குச் சமம் என்றும் சர்வதேச வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் சொந்த சட்டங்களையே மீறும் செயலாகும் எனக் கூறி, அவருடைய சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை அமெரிக்க அதிபரே தளர்த்துவது, டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top