உலகின் மிக முக்கியமான வரலாற்று மர்மங்களில் ஒன்றான, புகழ்பெற்ற அமெரிக்க பெண் விமானி அமீலியா ஏர்ஹார்ட்டின் மறைவு குறித்த புதிய ஆய்வுகள் பசிபிக் பகுதியில் தீவிரமடைந்துள்ளன. கடந்த 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியின் போது, பசிபிக் பெருங்கடல் வான்வெளியில் அவரது விமானம் தடயமின்றி மாயமானது. சுமார் 90 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது மறைவு குறித்த உண்மை இதுவரை உலகிற்குத் தெரியவரவில்லை.
இந்நிலையில், அமீலியா ஏர்ஹார்ட் பயணித்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் ஒரு தொலைதூரத் தீவிற்கு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தற்போது சென்றுடைந்துள்ளது. சுமார் 28 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கும் ஆற்றல் கொண்ட ராட்சத ‘தேங்காய் நண்டுகள்’ அதிகளவில் வாழும் மனித நடமாட்டமற்ற தீவுப் பகுதியிலேயே இந்த ஆய்வு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அபூர்வ நண்டுகள் எதையும் தின்னக்கூடியவை என்பதால், மனித எலும்புகளைத் தங்களின் பொந்துகளுக்குள் இழுத்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் ஆய்வுகள் முடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தேடுதல் வேட்டை, பல தசாப்த கால உலக மர்மத்திற்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.