செளதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா மசூதியில் ‘தகாத’ செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனித தலத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி, அந்நாட்டுச் சட்டப் பிரிவுகளின் கீழ் செளதி அரேபிய நீதிமன்றம் இந்த கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரிடையே தீவிர விவாதங்களும், கலவையான எதிர்வினைகளும் எழத் தொடங்கியுள்ளன.
செளதி அரேபியாவின் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் மரண தண்டனை குறித்து ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், புனித தலங்களின் புனிதத்தைக் காக்க இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியமே என மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் வங்கதேச அரசு தூதரக ரீதியாக மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அந்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.