450 கோடி ஆண்டுக்கால புதிருக்கு விடை! செவ்வாயின் நிலவிலிருந்து மண் கொண்டுவர புதிய விண்கலம்!

செவ்வாய் கிரகத்தின் நிலவுகள் எப்படி உருவானவை? அவை எங்கே பிறந்தன? என்ற 450 கோடி ஆண்டுகால நீண்ட வரலாற்றுப் புதிருக்கு விடைதேட விண்வெளி அறிவியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய விண்கலம் ஒன்று விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த அதிமுக்கிய விண்வெளிப் பயணத்தின் முதன்மை நோக்கம், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவின் மேற்பரப்பில் இறங்கி, அங்கிருக்கும் நிலவுத் துகளில் சுமார் 10 கிராம் அளவுக்குச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதாகும். செவ்வாயின் நிலவுகளான போபோஸ் மற்றும் டிமோஸ் ஆகியவை எவ்வாறு உருவாயின என்பதை அறிந்துகொள்ள இந்த மண் மாதிரிகள் மிகவும் அவசியமானவையாகக் கருதப்படுகின்றன.

பூமிக்குக் கொண்டுவரப்படும் இந்தத் துகள்களை ஆய்வு செய்வதன் மூலம், சூரியக் குடும்பத்தின் ஆரம்பகாலத் தோற்றம் மற்றும் கோள்களின் பரிணாம வளர்ச்சி குறித்த பல சுவாரசியமான தகவல்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திட்டம் வெற்றிபெற்றால், அது விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top