‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து…’ புகழ் பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி!

‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ போன்ற புகழ்பெற்ற பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் (75) இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவரது இந்தத் திடீர் மறைவு செய்தி கேட்டு தமிழ் திரையுலகினரும், இசை ரசிகர்களும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அருணாச்சலம்’, அஜித் குமாரின் ‘காதல் கோட்டை’, கார்த்தியின் ‘பருத்திவீரன்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடித் தன் கணீரென்ற குரலால் தனி முத்திரை பதித்தவர் கிருஷ்ணராஜ். நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கிராமத்துப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான இவர், திரையுலகில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி அசத்தியுள்ளார்.

வயது மூப்பு காரணமாக காலமான பாடகர் கிருஷ்ணராஜின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top