அர்த்தசாஸ்திரம் முதல் சமூக ஊடகம் வரை: ராணுவத்தினரை வீழ்த்தும் ‘ஹனி ட்ராப்’ வலை – ஓர் சுவாரசிய வரலாறு!

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள், பணியில் உள்ள கடற்படை வீரர் ஒருவர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) எனும் ஆபத்தான வலையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் போலி கணக்குகள் மூலம் பெண்களைப் போலப் பேசி, ராணுவ வீரர்களிடம் நட்பை ஏற்படுத்தி நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களைச் சேகரிக்கும் உத்தியாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ‘ஹனி ட்ராப்’ உத்தி இன்றைக்கு நேற்றைக்குத் தொடங்கியதல்ல; இதற்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளது. பண்டைக்கால பைபிள் கதைகளிலும், சாணக்கியரின் ‘அர்த்தசாஸ்திரத்திலும்’ எதிரிகளை வீழ்த்தவும் ரகசியங்களை அறியவும் இத்தகைய உத்திகள் கையாளப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. நவீன காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ராணுவ வீரர்களைக் குறிவைத்துத் தாக்குவது எதிரி நாடுகளின் உளவு அமைப்புகளுக்கு எளிதாகிவிட்டது. இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கவும், சமூக வலைதளப் பயன்பாட்டில் மிகக் கவனமாக இருக்கவும் ராணுவத்தினருக்குப் பல்வேறு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top