“என் மகளைப் பார்க்க வேண்டும்!” – தண்டனை முடிந்தும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் உகாண்டா பெண்!

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தண்டனைக் காலம் முழுமையாக முடிந்த பிறகும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். காவல் துறையினரை மிரட்டியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து நீதிமன்றம் சமீபத்தில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

நீதிமன்ற விடுதலைக்குப் பிறகும், பல்வேறு நிர்வாக நடைமுறைகள் மற்றும் தொடர் வழக்குகள் காரணமாக அவர் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படாமல் சிறப்பு முகாமிலேயே வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “உகாண்டாவில் உள்ள எனது மகளைக் காண்பதற்காக நான் உடனடியாகச் செல்ல வேண்டும். ஆனால் என் மீது தொடர்ந்து வழக்குகள் தொடரப்படுவதால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என்று கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் வெளிநாட்டுப் பிரஜைகள் சிறப்பு முகாம்களில் நீண்ட காலம் முடங்கிக் கிடக்கும் விவகாரம் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, அவர் சொந்த நாடு திரும்ப அரசு விரைந்து வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top