நேபாளத்தில் பயங்கரம்: இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து… தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணி பரிதாப பலி!

நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகர அடிவார முகாம் அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு அருகில் உள்ள பெரிச்சே கிராமப் பகுதியில் உள்ள தளம் ஒன்றில், இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஒன்றோடொன்று பலமாக மோதிக்கொண்டன. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பயணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த மூன்று நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து நேபாள விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எவரெஸ்ட் பகுதியில் நடந்த இந்தத் துயர விபத்து சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top