52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
கல்விக் கடன் வாங்கப் போறீங்களா? குறைந்த வட்டியில் வழங்கும் வங்கிகள் இவைதான்

இன்றைய காலகட்டத்தில் கல்விச் செலவுகள் அதிகமாகியுள்ளன. ஆனால் கல்வி கற்கவும், செல்லவும் ஆகும் செலவுகளுக்கு வங்கிகளில் எளிதாகக் கிடைக்கின்றன். ஒருவேளை நீங்கள் கல்விக்காகக் கடன் பெறத் திட்டமிட்டிருந்தால் பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதம் மற்றும் செயலாக்கக் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது மிக முக்கியம். படிப்பை முடித்த பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணையை (EMI) வட்டி விகிதமே தீர்மானிக்கிறது. உங்கள் கல்விச் செலவுகளைச் சமாளிக்க உதவும் என்றாலும், அதைப் பெறுவதற்கு முன் சில முக்கிய விஷயங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

பொதுத்துறை வங்கிகளில் குறைவான வட்டி!

பொதுத்துறை வங்கிகள் பொதுவாகக் குறைவான வட்டி விகிதங்களில் கல்விக் கடன்களை வழங்குகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா () 6.90 % முதல் 9.90 % வரையிலும், பேங்க் ஆஃப் பரோடா 6.85 % முதல் 10.45 % வரையிலும், பஞ்சாப் நேஷனல் பேங்க் 4 % முதல் 10.10 % வரையிலும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 6.85 % முதல் 10.05 % வரையிலும், பேங்க் ஆஃப் இந்தியா 6.85 % முதல் 9.80 % வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இவ்வங்கிகள் பல திட்டங்களுக்குச் செயலாக்கக் கட்டணங்களையும் வசூலிப்பதில்லை.

மற்ற பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதங்கள்!

கனரா வங்கி 7.25 % முதல் 10.10 % வரையிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 8.75 % முதல் 9 % வரையிலும், ஐடிபிஐ வங்கி 7.45 % முதல் 11.50 % வரையிலும், யூகோ வங்கி 7.15 % முதல் 11.20 % வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இவ்வங்கிகளில் செயலாக்கக் கட்டணம் எதையும் வசூலிக்காத அல்லது மிகக் குறைந்த அளவே வசூலிக்கும் வங்கிகளும் உள்ளன.

தனியார் வங்கிகளில் வட்டி விகிதங்கள்!

தனியார் வங்கிகள் 10.50 % முதல் தொடங்கும் வட்டி விகிதங்களில் கடன்களை வழங்குகின்றன. ஐசிஐசிஐ வங்கி 8.50 % முதல் 13 % வரையிலும், ஆக்சிஸ் வங்கி 6.90 % முதல் 13.50 % வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி 9.50 % முதல் வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதில் செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 1.5% வரை இருக்கும்.

செயலாக்கக் கட்டணம் முக்கியம்!

நீங்கள் பெரிய அளவிலான தொகையையோ அல்லது வெளிநாட்டில் படிப்பதற்கான கடனையோ பெறுகிறீர்கள் என்றால், செயலாக்கக் கட்டணங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். சில வங்கிகள் எவ்விதக் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை. அதே சமயம் மற்ற வங்கிகள் கடன் தொகையில் 1 % முதல் 2 % வரை கட்டணம் வசூலிக்கின்றன. எனவே, இறுதி முடிவை எடுப்பதற்கு முன் வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம், தவணை ஒத்திவைப்பு காலம் (moratorium period) மற்றும் மாதத் தவணை (EMI) ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.ஒரு வங்கி உங்களுக்குப் பெரிய தொகையை வழங்க முன்வந்தாலும் அந்த முழுத் தொகையையும் நீங்கள் கட்டாயம் பெற வேண்டியதில்லை. கடன் தொகை அதிகமாக இருந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டியும் அதிகமாக இருக்கும். எனவே, முதலில் உங்கள் கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள், புத்தகங்கள், பயணம் மற்றும் பிற கல்விச் செலவுகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப கடன் தொகையைத் தேர்வு செய்தால் நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *