வைத்திருக்கும் மக்களுக்கு ஜூலை 1 முதல் ஒரு முக்கியமான மாற்றம் வருகிறது. பழைய 'mAadhaar' செயலி நிறுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு, தனிப்பட்ட தரவுகள் மீதான சிறந்த கட்டுப்பாடு மற்றும் நவீன டிஜிட்டல் சரிபார்ப்பு முறையை வழங்குவதற்கான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதுகுறித்து 'X' தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தியதுடன், பயனர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் செயலிக்கு மாறுமாறும் கேட்டுக்கொண்டது.அந்தப் பதிவில், "mAadhaar செயலி விரைவில் நிறுத்தப்படவுள்ளது. புதிய ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து, விரைவான அணுகல் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய சேவைகளை எளிதாகப் பெறலாம். உங்கள் ஆதார் பயன்பாட்டு அனுபவத்தை முன்னெப்போதையும் விட எளிமையாகவும் வசதியாகவும் மாற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தப் புதிய செயலியானது பழைய mAadhaar தளத்தின் வெறும் தோற்ற மாற்றம் மட்டுமல்ல; இது அன்றாட வாழ்வில் ஆதார் சரிபார்ப்பு மற்றும் அடையாளத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் முறையையே மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது. முந்தைய பதிப்பில், சரிபார்ப்பின் போது ஆதார் குறித்த முழு விவரங்களும் காட்டப்பட்டன. ஆனால் புதிய தளமானது, தகவல்களைத் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுத்துப் பகிர்வதற்கும், அணுகல் அனுமதிக்கு முன் வலுவான அடையாளச் சரிபார்ப்புகளை மேற்கொள்வதற்கும் முன்னுரிமை அளிக்கிறது.புதிய ஆதார் செயலியில் சேர்க்கப்பட்டுள்ள மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பாதுகாப்பான QR குறியீடு அடிப்படையிலான ஆதார் பகிர்வு வசதியாகும். ஹோட்டல்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற சேவை மையங்களில் நேரில் சென்று சரிபார்ப்பதை எளிதாக்குவதே இந்த அம்சத்தின் நோக்கமாகும். ஆதார் குறித்த முழு விவரங்களையும் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, பயனர்கள் இப்போது QR சரிபார்ப்பு மூலம் தேவையான தகவல்களை மட்டும் பகிர்ந்துகொள்ள முடியும். அங்கீகார அமைப்பும் (authentication system) முக்கிய மேம்படுத்தலைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு, ஆதார் சேவைகளைப் பெறுவது பெரும்பாலும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் ஓடிபி சரிபார்ப்பையே சார்ந்திருந்தது. ஆனால் புதிய அமைப்பு அடையாளச் சரிபார்ப்பில் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளைச் சேர்க்கிறது. ஓடிபி எண்களுடன் சேர்த்து, பயன்படுத்தப்படும் சேவையைப் பொறுத்து பயனர்கள் முக அங்கீகாரம் (face authentication) மற்றும் கியூஆர் (QR) குறியீடு சரிபார்ப்பு ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். டிஜிட்டல் அடையாள அணுகலில் தவறான பயன்பாட்டைக் குறைக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.இந்தப் செயலி பயனர்களுக்குத் தங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் மீது நேரடி கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. பயனர்கள் இப்போது கைரேகை, முகம் மற்றும் கருவிழி அங்கீகாரத் தரவுகளை நேரடியாகச் செயலி மூலமாகவே லாக் செய்யவோ அல்லது நிர்வகிக்கவோ முடியும். குறிப்பாகப் பகிரப்பட்ட அல்லது பொதுப் பயன்பாட்டிலுள்ள சாதனங்களில், அங்கீகரிக்கப்படாத அணுகல் அபாயத்தை இது குறைக்கும் என்று UIDAI கூறுகிறது.பழைய mAadhaar செயலியை அமைக்கும் முறையை விட, புதிய ஆதார் செயலியை அமைக்கும் முறை சற்று விரிவானது. பயனர்கள் முதலில் Play Store போன்ற அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் இருந்து அதிகாரப்பூர்வ "Aadhaar" செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு, தங்கள் ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி மூலம் அதைச் சரிபார்க்க வேண்டும்.சில பயனர்கள் அமைப்புச் செயல்முறையின் போது முக அங்கீகாரத்தையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அது முடிந்ததும், ஆதார் எண்ணைச் சேர்த்து மற்றொரு ஓடிபி சரிபார்ப்பை நிறைவு செய்வதற்கு முன் அவர்கள் ஒரு பின் நம்பரை உருவாக்கலாம் அல்லது பயோமெட்ரிக் அன்லாக் (biometric unlock) வசதியைச் செயல்படுத்தலாம். ஒரே ஒரு உள்நுழைவு முறையை மட்டும் சார்ந்திருக்காமல், பல்வேறு நிலைகளில் பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பல-படிநிலை அமைப்பு செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.UIDAI தனது இலவச ஆன்லைன் ஆதார் ஆவணப் புதுப்பிப்பு சேவையை நீட்டித்துள்ள அதே வேளையில், இந்த புதிய செயலிக்கும் மாறியுள்ளது. பயனர்கள் myAadhaar இணையதளத்தில் தங்கள் அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான ஆவணங்களை 2027ஆம் ஆண்டின் ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாகப் புதுப்பிக்கவும் சரிபார்க்கவும் முடியும். முன்னதாக, இந்த வசதி 2026 ஜூன் 15 வரை மட்டுமே இலவசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

