எந்தக் குழந்தைகளுக்கு இந்த டிக்கெட் எடுக்க வேண்டும்?
உங்கள் குழந்தைக்கு 5 முதல் 11 வயதுக்குள் இருந்து அவர்களுக்குத் தனி இருக்கை தேவையில்லை என்றால், NOSB டிக்கெட் தேவைப்படும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தனி டிக்கெட் தேவையில்லை. அவர்கள் டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம். ஆனால் அவர்களுக்குத் தனி இருக்கை கிடைக்காது.
எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
NOSB டிக்கெட்டுகளுக்குச் சாதாரண டிக்கெட் விலையில் பாதி அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் முழு கட்டணமும் வசூலிக்கப்படலாம். குழந்தைக்குத் தனி இருக்கை வேண்டுமென்றால் நீங்கள் முழு டிக்கெட்டை வாங்கி அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
NOSB டிக்கெட் என்றால் என்ன?
NOSB என்பது குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு வகை டிக்கெட் ஆகும். இந்த டிக்கெட் குழந்தைக்கு வழங்கப்பட்டாலும் தனி இருக்கை வழங்கப்படுவதில்லை. குழந்தை தனது பெற்றோர் அல்லது ஒரு பெரியவருடன் ஒரே இருக்கையில் பயணிக்க வேண்டும். இருக்கை எண்ணுக்குப் பதிலாக டிக்கெட்டில் NOSB என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
எந்த வகையான பெட்டிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும்?
இந்த விதிமுறை ஸ்லீப்பர், 3AC, 2AC மற்றும் 1AC போன்ற படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்குப் பொருந்தும். சேர் கார் (Chair car) மற்றும் இருக்கை வசதி மட்டுமே கொண்ட பெட்டிகளில் NOSB வசதி இல்லை. அத்தகைய பெட்டிகளில் குழந்தைகளுக்குத் தனி இருக்கை வசதியுடன் முன்பதிவு செய்ய வேண்டும்.
டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
இணையதளம் அல்லது செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, குழந்தையின் வயதை உள்ளிட்ட பிறகு இருக்கை மற்றும் NOSB ஆகிய விருப்பங்கள் தோன்றும். நீங்கள் NOSB ஆப்சனைத் தேர்ந்தெடுத்தால் குழந்தைக்குத் தனி இருக்கை கிடைக்காது. ஆனால், இருக்கை விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால் குழந்தையின் பெயரில் தனி இருக்கை முன்பதிவு செய்யப்படும். எனவே நீங்கள் அடுத்த முறை குழந்தையோடு ரயில் பயணம் செய்யுபோது இந்த விதிமுறைப்படி டிக்கெட் முன்பதிவு செய்தால் வீண் சிரமங்களைத் தவிர்க்கலாம்.

