ஹர்திக் பாண்டியா மட்டும் பிளேயிங் 11-ல் இருந்தால், 12 வீரர்கள் ஆடுவதற்கு சமமாக இருக்கும். இதனால்தான், ஹர்திக் பாண்டியாவுக்கு எப்போதுமே மதிப்பு அதிகமாக இருக்கிறது.தற்போது, ஐபிஎல் 2027 சீசனுக்கு முன், மும்பை இந்தியன்ஸில் இருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற உள்ளதால், அவரை வாங்க, மற்ற அணிகள் கடும் போட்டி போட்டு வருகின்றன. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மட்டுமே ஹர்திக் பாண்டியாவை வாங்க முயற்சிக்காமல் இருந்தனர்.இந்நிலையில், நாமும் எதற்காக சும்மா இருக்க வேண்டும் எனக் கருதிய ஆர்சிபி அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை கேட்க, மும்பை இந்தியன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக டிம் டேவிட்டையும், தேவ்தத் படிக்கலையும் விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஆர்சிபி அணி நிர்வாகம், பேச்சு வார்த்தையை அப்படியே முடித்துக் கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும், ஹர்திக் பாண்டியா வந்தால், அவருக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும், இதனால், 2 முறை கோப்பை வென்று கொடுத்த ராஜத் படிதரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இப்படி நடந்தால், அணிக்குள் தேவையில்லாத சிக்கல்தான் ஏற்படும்.மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா இருந்தபோது, சீனியர் வீரர்கள் சிலரிடம் ஹர்திக் பாண்டியா, நல்லுறவை வைத்துக் கொள்ளவில்லை என்ற பேச்சும் இருப்பதால், ஹர்திக்கை வாங்கினால், அது அணிக்குள் தேவையில்லாத குழப்பத்தைதான் ஏற்படுத்தும். சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு சமமாக மாறிவிடும் என்பதால், ஹர்திக்கை வாங்கும் முடிவுக்கு, ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.மேலும், ஐபிஎல் 2027 டிரேடிங்கில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது என்ற முடிவிலும் ஆர்சிபி இருக்கிறதாம். ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்புகூட, ஒருசில முக்கியமில்லாத வீரர்களை மட்டுமே வெளியேற்ற ஆர்சிபி நிர்வாகம் உடிவு செய்துள்ளது.ஹர்திக்கை கேட்காத ஒரே அணி: தற்போதுவரை, ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங் பேச்சு வார்த்தையில், ஹர்திக் பாண்டியாவை கேட்காத ஒரே அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான் இருக்கிறது. இந்த அணியில், இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இருக்கிறார்கள். இதனால்தான், ஹர்திக்கை கேட்க விரும்பவில்லை.ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முட்டிமோதி வருகின்றன. இதில், சிஎஸ்கே கொடுக்கும் ஆஃபரைவிட, கேகேஆர் அணி நிர்வாகம் கொடுக்கும் ஆஃபர்தான், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு பிடித்துள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியாவோ, சிஎஸ்கேவுக்கு செல்லதான் விருப்பம் எனத் தெரிவித்துள்ளார். இதனால்தான், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், இறுதி முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், சூர்யகுமார் யாதவையும் டிரேடிங்கில் அனுப்பும் முடிவில்தான் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா டிரேடிங் பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்தப் பிறகு, சூர்யகுமார் யாதவின் டிரேடிங் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

