சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால், அணியின் மதிப்பு, தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. நிலைமை இப்படியே சென்றால், சிஎஸ்கே டம்மி அணியாக மாறிவிடும். இதனால், ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுத்தாக வேண்டும் என்ற நோக்கில், தற்போது இருந்தே வேலையை ஆரம்பித்துள்ளனர்.ருதுராஜ் நீக்கம்: கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டை, அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு புது ரோலை கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இனி, சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரேவை நிரந்தர ஓபனர்களாக ஆக்கி, ருதுராஜ் கெய்க்வாட்டை ஒன்டவுடன் இடத்தில் ஆட வைக்க முடிவு செய்துள்ளனர்.ஓபனர்கள் அதிரடியாக ஆடுவார்கள், மிடில் வரிசை பேட்டர்களும் அதிரடியாக ஆடுவார்கள். ஆனால், ருதுராஜ் கெய்க்வாட், தொடர்ச்சியாக நிதானமாக, 20 ஓவர்கள் வரை ஆட வேண்டும். இதுதான் புது திட்டமாக இருக்கிறது. அதாவது, ஒரு பக்கம் அதிரடி காட்ட, ருதுராஜ் கெய்க்வாட், அவர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசிவரை விளையாட வேண்டும்.இதற்கு ஏற்ப, ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு தற்போதே சிஎஸ்கே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.என்ன காரணம்? ருதுராஜ் கெய்க்வாட், செட்டில் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். குறிப்பாக, பவர் பிளே முடியும் வரை செட்டில் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். இதனால், சிஎஸ்கேவால் பவர் பிளேவில் அதிக ரன்களை அடிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே, ருதுராஜுக்கு அவருக்கு ஏற்ற வகையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.புதுக் கேப்டன் யார்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, புதுக் கேப்டன் யார் என்பதை நிர்வாகம் இன்னமும் முடிவு செய்யவில்லை. ஹர்திக் பாண்டியா டிரேடிங்கில் கிடைத்தால், அவரை கேப்டனாக நியமிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒருவேளை, ஹர்திக் பாண்டியாவை வாங்க முடியவில்லை என்றால், சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும், ஆயுஷ் மாத்ரேவுக்கு தற்போது இருந்தே துணைக் கேப்டன் பதவியை கொடுத்து, தயார் படுத்த முடிவு செய்துள்ளனர்.அதிரடியாக விளையாட திட்டம்: ஐபிஎல் ஆட்டங்கள், முன்புபோல் இல்லை. பல அணிகள் அசால்ட்டாக 200+ ரன்களை அடிக்கின்றன. சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளால் 220+ ரன்களை கூட அசால்ட்டாக சேஸ் செய்ய முடிகிறது. நிலைமை இப்படி இருக்க, சிஎஸ்கே அணி, இன்னமும் 170 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் தடுமாறி வருகிறது.இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கான சிஎஸ்கே அணியை, மிகவும் வலிமையாக கட்டமைக்க முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, தொடர்ச்சியாக 200+ ரன்களை அடிக்கும் வகையில், பேட்டிங் வரிசையை மிகவும் பலமிக்கதாக கட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.சிஎஸ்கே நிர்வாகம், பந்துவீச்சு படை மீதும் முழு திருப்தியுடன் இல்லை. இதனால், டிரேடிங்கிலேயோ அல்லது ஏலத்திலேயோ தரமான வேகப்பந்து வீச்சாளர்களை வாங்க முடிவு செய்துள்ளனர். இப்படி, அணியை தரமாக கட்டமைக்கும் வேலையை தற்போது இருந்தே சிஎஸ்கே நிர்வாகம் செய்ய துவங்கியுள்ளது.ஐபிஎல் 2026 சீசனுக்கான ரிவியூ மீட்டிங் முடிந்தப் பிறகு, டிரேடிங்கில் தீவிரம் காட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

