டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, கோப்பையை வென்று அசத்தியது. ஆனால், அதன்பிறகு நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல், தொடரை இழந்து சொதப்பினார்கள்.இதனால், இந்திய டி20 அணி வீரர்கள் மீதும், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மீதும், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதும் பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த அதிருப்தியை சமாளிக்க வேண்டும் என்றால், இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 4 போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.இந்நிலையில், இந்த 4 போட்டிகளில் வெற்றியைப் பெற, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திட்டம் வகுத்து, இந்திய வீரர்களிடம் அதனை தெரிவித்துள்ளாராம். அப்போது, திலக் வர்மாவுக்கு, கம்பீர் கடும் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.என்ன எச்சரிக்கை? டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்தே, திலக் வர்மாவால் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடிக்க முடியவில்லை. இதனால்தான், ஒன்டவுன் இடத்தை இழந்து, தற்போது பினிஷர் இடத்திற்கு சென்றுள்ளால். 5 அல்லது 6ஆவது இடத்தில் ஆடும் இவர், மீண்டும் நிதானமாகவே விளையாடுகிறார். இதனால், 10-12 ஓவர்களுக்கு பிறகு, இந்திய அணியின் ஸ்கோர் வேகத்தில் தொய்வு ஏற்படுகிறது. இந்த விஷயமும், தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிவிடுகிறது.இதனால்தான், அணி மீட்டிங்கின்போது திலக் வர்மாவுக்கு, கௌதம் கம்பீர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், ‘‘திலக் வர்மாவின் ஆட்டம், எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பினிஷர் இடத்தில் ஆடி, 100, 110+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடிப்பது, என்ன மாதிரியான பேட்டிங் என்று தெரியவில்லை. ஒரு போட்டி, இரண்டு போட்டி என்றால் பரவாயில்லை. தொடர்ச்சியாக இதேபோல் நிதானமாக ஆடுகிறார். இப்படி ஆடும் வீரரை, எப்படி பிளேயிங் 11-ல் தொடர்ச்சியாக சேர்க்க முடியும்?’’‘‘இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது போட்டிதான், திலக் வர்மாவுக்கு கடைசி சான்ஸ். இதில், இவர் சிறப்பாக விளையாடவில்லை என்றால், உடனே பிளேயிங் 11-ல் இருந்து நீக்குவதை தவிர வேறு வழியில்லை. பிறகு, உள்ளூர் பார்மெட்டில் திறமையை நிரூபித்தப் பிறகுதான், அணியில் சேர்க்க முடியும். அதற்குள், வேறு ஒரு வீரர், சிறப்பாக செயல்பட்டு, திலக் வர்மாவின் இடத்தை பிடித்துவிட்டால், திலக் வர்மாவுக்கு அடுத்து வாய்ப்பே கிடைக்காது. இதனால், 2ஆவது போட்டியில், திலக் வர்மா பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவதை தவிர வேறு வழியில்லை’’ என கம்பீர் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய அணி மிடில் வரிசையில், இணைய ஆர்சிபி கேப்டன் ராஜத் படிதர், தயார் நிலையில் இருக்கிறார். இதனால், திலக் வர்மா சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2ஆவது டி20 போட்டி, ஜூன் 4ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும். இப்போட்டியிலும் இந்திய அணி தோற்றால், அது கடும் விமர்சனத்தை பெறும். இதனால், இப்போட்டி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

