52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அதிமுகவில் இருந்து விலகலா? இபிஎஸ்ஸிடம் உறுதியாக முடிவை சொன்ன லீமா ரோஸ்

அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள் ஏற்கனவே தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் சிலர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அடுத்ததாக யார் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய போகிறார்கள் என்று தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் அதிமுகவின் லால்குடி எம்எல்ஏ தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக லால்குடி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட லீமா ரோஸ் வெற்றி பெற்றார். இதனையடுத்து தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக அதிருப்தி அணியான எஸ்.பி. வேலுமணியின் அதிமுக தரப்பு எம்எல்ஏக்கள் குழுவில் லீமா ரோஸ் இருந்தார்.இந்நிலையில் அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு லீமா ரோஸ் தான் காரணம். அவர் கட்சியை பிரிக்கிறார் என்றெல்லாம் பல வதந்திகள் அரசியல் வட்டாரத்தில் பரவியது. இதனை திட்டவட்டமாக மறுத்த லீமா ரோஸ், கட்சியை இணைப்பதற்கான பணிகளே நடந்து வருகிறது எனவும் விளக்கம் அளித்தார். இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ச்சியாக தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், லீமா ரோஸும் அதுபோன்ற ஒரு முடிவை எடுப்பாரா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.இப்படியான நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியுள்ளது பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது. அதாவது சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய லீமா ரோஸ், எனக்கு வாய்ப்பு கொடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினீர்கள். அதிமுகவை விட்டு எந்த சூழலிலும் போக மாட்டேன். என்றும் இந்த கட்சிக்காக உண்மையாக இருந்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.இவ்வாறு லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். அவர் அதிமுகவில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், லீமா ரோஸ் தற்போது இந்த உறுதியை அளித்துள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தேர்தல் தோல்விகள் குறித்து மாவட்ட ரீதியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் இருந்து விலகியவர்களை நினைத்து கவலை இல்லையென நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.அதோடு தவெக ஆட்சி நீடிக்காது. உள்ளாட்சி தேர்தலில் அடுத்ததாக கவனம் செலுத்த வேண்டும். கட்சிக்கு விஸ்வாசமாக இருப்பவர்களுக்காக மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கேளுங்கள் என நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார் இபிஎஸ். அதோடு உள்ளாட்சியை எப்போதும் நல்லாட்சி என சொல்லுவார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.இதற்கிடையில் நேற்றைய தினம் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆற்காடு எம்எல்ஏ மற்றும் கே.சி. வீரமணி இருவரும் பங்கேற்கவில்லை. இதனையடுத்து அடுத்ததாக இவர்கள் தங்களின் சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் பரவியது. இந்நிலையில் ஆற்காடு எம்எல்ஏ, சுடுகாட்டிற்கு போனாலும் போவேனே தவிர, மாற்றுக்கட்சியில் சேருவதற்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *