மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
| அதிகாரி பெயர், தற்போதைய பணியிடம் | புதிய பணியிடம் |
| , டிஐஜி போலீஸ், கிரைம் பிரிவு சிஐடி, சென்னை | டிஐஜி போலீஸ், சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு |
| விக்ரமன் ஐபிஎஸ், டிஐஜி போலீஸ், காத்திருப்போர் பட்டியல் | டிஐஜி போலீஸ், கிரைம் பிரிவு சிஐடி |
| ரகுபதி ஐபிஎஸ், எஸ். பி, காத்திருப்போர் பட்டியல் | டிசிபி, சட்டம் ஒழுங்கு, பள்ளிக்கரணை, தாம்பரம் காவல் ஆணையரகம் |
யார் இந்த வருண் குமார் ஐபிஎஸ்?
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் பல் மருத்துவப் படிப்பை முடித்தவர். ”காக்க காக்க” திரைப்படத்தை பார்த்து ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. 2007ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதத் தொடங்கினார். நான்கு ஆண்டுகள் தொடர் உழைப்பால் பலன் கிடைத்தது. 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச். 15 ஆண்டுகள் காவல்துறை பணியை நிறைவு செய்திருக்கிறார். மதுரை அமலாக்கத்துறை எஸ். பி, திருச்சி மாவட்ட எஸ். பி, திருச்சி அரக டிஐஜி, சென்னை கிரைம் பிரிவு டிஐஜி எனப் பல்வேறு பதவிகளை வகித்தவர். திருச்சியில் பணியாற்றிய போது பெரிதும் அறியப்பட்டார்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் மோதல் போக்கு ஏற்பட்டு அரசியல் களத்திலும் கவனம் ஈர்த்தவர். இவரது மனைவி வந்திதா பாண்டேவும் ஐபிஎஸ் அதிகாரி என்பது கூடுதல் கவனம் பெறுகிறது. இவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். வந்திதா பாண்டே 2011ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் கேடரில் தேர்ச்சி பெற்றார். பயிற்சி முடிந்து 2013ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏஎஸ்பியாக பணியில் சேர்ந்தது கவனிக்கத்தக்கது.

