ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், ஹர்திக் பாண்டியாவுக்குதான் அதிக மவுசு இருக்கிறது. பெரும்பாலான அணிகள் ஹர்திக் பாண்டியாவை கேட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டீலுக்கு மும்பை இந்தியன்ஸ் கிரீன் சிக்னல் காட்டியது.பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோரை விட்டுக்கொடுக்க கேகேஆர் அணி நிர்வாகம் முன் வந்த நிலையில், தற்போது திடீரென்று ஹர்திக் பாண்டியா வேண்டாம், சூர்யகுமார் யாதவ்தான் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் கேகேஆர் அணி நிர்வாகம் கேட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸும் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாம்.ராஜஸ்தானுடன் பேச்சு வார்த்தை: இந்நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவை கேட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பேச்சு வார்த்தையை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை கேட்ட நிலையில், அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் மீண்டும் பேச்சு வார்த்தையை துவங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஜோப்ரா ஆர்ச்சரை விட்டுக்கொடுத்தால், ஹர்திக் பாண்டியாவை தர சம்மதம் எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆர்ச்சருடன், 5 கோடி ரூபாய் பணமும் கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸிடம், மும்பை இந்தியன்ஸ் பேசியுள்ளதாம்.கறார் முடிவு: ஜோப்ரா ஆர்ச்சரை கொடுக்க முடியாது என்றால், பேச்சு வார்த்தைக்கு, அப்படியே முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாம். காரணம், ஹர்திக் பாண்டியாவை கேட்டு சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள், வரிசையில் நிற்கின்றன. இதனால்தான், மும்பை இந்தியன்ஸ் இப்படி கறாராக தெரிவித்துள்ளதாம்.இளம் ஓபனரை வாங்க திட்டம்: மும்பை இந்தியன்ஸ் அணி ஓபனர் ரோஹித் சர்மா, இன்னமும் ஒருசில வருடங்கள் மட்டுமே விளையாட முடியும் என்ற நிலைமை இருக்கிறது. இதனால், தற்போது இருந்தே அணிக்குள் புது இந்திய இளம் ஓபனரை கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸில் இருந்து வெளியேற்றப்பட்ட இஷான் கிஷனை மீண்டும் அணிக்குள் கொண்டுவர, மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸிடம் பேச்சு வார்த்தையை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இஷான் கிஷனை வாங்க எந்த எல்லைக்கும் செல்ல மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். இவரை வாங்க, 30 கோடியும், டிரேடிங் கட்டணமாக 100 கோடியும் கூட கொடுக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இஷான் கிஷனை வாங்கிவிட்டால், மும்பை இந்தியன்ஸுக்கு ஒரு ஓபனர் கிடைத்துவிடுவார். மேலும், வெளிநாட்டு விக்கெட் கீப்பரை ஆட வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் வைத்துதான், இஷான் கிஷனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளதாம்.ஆனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இஷான் கிஷனை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக்கொடுக்காது எனக் கருதப்படுகிறது. இதனால், இரு தரப்புல், பெரிய எதிர்பார்ப்பில்தான் பேச்சு வார்த்தை நடத்தும் எனக் கருதப்படுகிறது.

