உத்வேகம் ஊட்டிய அண்ணா, அம்பேத்கரின் புத்தகங்கள்
என்னுடைய சிந்தனை எல்லாமே தமிழில் தான் இருக்கும். பள்ளி பருவ காலத்தில் சிறிய நூலகத்திற்குள் ஆசிரியர்கள் என்னை அழைத்து சென்றனர். எப்போதெல்லாம் சோகமாக இருக்கிறாயோ, அப்போதெல்லாம் நல்ல தலைவர்களின் புத்தகங்களை படிக்குமாறு அறிவுறுத்தினர். முதன் முதலில் என் கையில் அளிக்கப்பட்ட புத்தகம் பேரறிஞர் அண்ணாவின் புத்தகம். புரட்சியாளர் புத்தகம். மொத்தமே 30 பக்கங்கள் மட்டும் தான் இருக்கும். அதையெல்லாம் ஆர்வமாக படித்து முடித்தேன்.
பரிசாக கிடைத்த 3,000 புத்தகங்கள்
இன்றைய நிகழ்வில் கூட சால்வை போடாமல் புத்தகங்களை பரிசாக அளித்தார்கள். இதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். கடந்த 60 நாட்களில் மட்டும் சுமார் 3,000 புத்தகங்கள் எனக்கு பரிசாக வந்திருக்கிறது. இதை அரசு பள்ளிக்கு தானமாக கொடுக்கும் போது நூலகம் அமைக்க உதவிகரமாக இருக்கும். அது மாணவ, மாணவிகளின் சிந்தனையை தூண்டும் விதமாக அமையும். இதுபோன்று படித்து சிந்தனையை வளர்த்து கொண்டதால் தான், இந்த இடத்தில் நிற்கிறேன் என்றார்.
ஆங்கிலம் பேச முடியாமல் திணறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
எல்லா வசதிகளும் இருப்பவர்கள் பெரும்பாலும் சாதிப்பது இல்லை. எதுவும் இல்லாத ஏழ்மையான சூழலில் இருந்து வருபவர்கள், ஒருவித அழுத்தத்திற்கு தொடர்ந்து ஆளாகி மேலே உயர்ந்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை சொல்கிறேன். தமிழ் மீடியத்தில் பள்ளி படிப்பை முடித்து விட்டு மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் சேர்ந்ததும் சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை. அதற்கு முன்பு செயிண்ட் ஜோசப் கல்லூரியில் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் ஓராண்டு பொருளாதாரம் படித்தேன்.
தன்னம்பிக்கை ஊட்டிய அக்னி சிறகுகள் புத்தகம்
பின்னர் சென்னையில் வாய்ப்பு கிடைத்ததும் இங்கு வந்து சேர்ந்தேன். மற்றவர்களை போல ஆங்கிலம் பேச வராததால் பெரிதும் சிரமப்பட்டேன். அப்போது ஜெயக்குமார் என்ற பேராசிரியர் எனக்கு ”அக்னி சிறகுகள்” என்ற புத்தகத்தை வழங்கினார். அவ்வளவு அழகாக எழுதியிருப்பார். நம்மை போலவே தமிழ் வழிக் கல்வியில் படித்து வந்தவர்.மிக சாதாரண மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். வீட்டில் காசு இருக்காது. காலையில் எழுந்ததும் வீடு வீடாக சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையை செய்தார். அன்று நியூஸ் பேப்பர் போட்ட ஒரு சிறுவன், பின்னாளில் நியூஸ் பேப்பரில் தலைப்பு செய்தியாக மாறினார். அதற்கு காரணம் அரசு பள்ளி கொடுத்த தன்னம்பிக்கை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

