52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணமா – இன்றைய சந்தை விலையை தெரிஞ்சுக்கோங்க

(NECC) அறிவித்துள்ள புதிய விலைப்பட்டியலின் படி, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மீண்டும் 10 காசுகள் உயர்ந்து உள்ளது.

தொடர்ந்து 2 நாட்களாக விலை உயர்வு

நேற்று (ஜூன் 11 ஆம் தேதி) ஒரு ரூ. 6.00-இல் இருந்து ரூ. 6.10 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (ஜூன் 12 ஆம் தேதி) மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 6.20 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்களில் மட்டும் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து உள்ளது.

முட்டை தேவை அதிகரிப்பு - விலையில் முன்னேற்றம்

தொடர்ச்சியாக விலை உயர்ந்து வருவது யை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக உற்பத்திச் செலவுகள் அதிகரித்தும், விற்பனை விலை குறைவாக இருந்ததால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது தேவை அதிகரித்து உள்ளதால் முட்டை விலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

முட்டை விலை உயர்வுக்கான காரணங்கள்

முட்டை விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

  • : பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளதால் அதிகளவில் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் சந்தையில் தேவை அதிகரித்து உள்ளது.
  • உற்பத்தி திறன் குறைவு: மேலும், கடும் வெயிலின் தாக்கம் காரணமாக முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக முட்டை உற்பத்தி அளவும் குறைந்து உள்ளது.
  • முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு: அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியும் அதிகரித்து உள்ளதால் உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
  • வடமாநிலங்களில் தேவை அதிகரிப்பு: வடமாநிலங்களில் தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் அங்கு முட்டைக்கான தேவை அதிகரித்து உள்ளது.
  • இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகளவில் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

மீண்டும் 10 காசுகள் விலை உயர்வு

தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு, ஏற்றுமதி உயர்வு மற்றும் வடமாநில சந்தைகளில் நிலவும் கூடுதல் தேவை ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு இன்று மீண்டும் 10 காசுகள் விலையை உயர்த்தி உள்ளது.

வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு

தற்போதைய சந்தை நிலவரத்தை பார்க்கும் போது, வரும் நாட்களிலும் முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் முட்டை சந்தையில் தொடர்ந்து விலை உயர்வு நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *