லக்னோவில் துவங்கிய 2ஆவது ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.இந்திய இன்னிங்ஸ்: இரண்டாவது பேட்டிங் ஆடும்போது, பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், முதலில் களமிறங்கும் இந்திய அணி பெரிய ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில், ஓபனர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 9 பந்தில் 4 ரன்களை மட்டும் அடித்து அவுட் ஆட நிலையில், மற்றொரு ஓபனர் ரோஹித் சர்மா, 39 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்களை குவித்து அசத்தினார்.பெரிய பார்ட்னர்ஷிப்: இதனைத் தொடர்ந்து, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் இணைந்து, 140 பந்துகளில் 224 ரன்களை குவித்து, அடுத்தடுதுத சதத்தையும் பதிவு செய்தார்கள். மேலும், இந்திய அணிக்காக ஒரே போட்டியில், இரண்டு பேட்டர்கள் 80 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் சதம் அடித்ததும் இதுதான் முதல் முறையாக அமைந்தது.இஷான் கிஷன், 79 பந்துகளில் 14 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 125 ரன்களை அடித்த நிலையில், கேப்டன் கில் 110 பந்துகளில் 22 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 154 ரன்களை குவித்து அசத்தினார்.இருவரும் இப்படி, அதிரடியாக விளையாடியதால், இந்திய அணி 400+ ரன்களை அடிப்பது கிட்டதட்ட உறுதியானது. இதனைத் தொடர்ந்து, ஷ்ரேயஸ் ஐயர் 26 (24), வாஷிங்டன் சுந்தர் 19 (19) ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டு அவுட் ஆனார்கள். இதனால், இந்திய அணி, 49.5 ஓவர்களில் 402/10 ரன்களை எடுத்தது.: இந்திய ஒருநாள் அணிக்காக, அதிவிரைவாக 3000 ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில், ஷுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர், வெறும் 62 இன்னிங்ஸ்களிலேயே 3000+ ரன்களை அடித்துவிட்டார். ஷிகர் தவன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் 72 இன்னிங்ஸ்களில் 3000+ ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். விராட் கோலி, 75 இன்னிங்ஸில் 3000 ரன்களை அடித்து, மூன்றாவது இடத்தில் இருக்கிறார். கே. எல். ராகுல் 78 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளார்.குறைந்த பந்தில் 3000 ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷுப்மன் கில் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். கபில் தேவ், 2995 பந்துகளில் 3000 ரன்களை அடித்து முதல் இடத்திலும், ஷுப்மன் கில் 3016 பந்துகளில் 3000 ரன்களை அடித்து இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள். ஷ்ரேயஸ் ஐயர், 3049 பந்துகளில் 3000 ரன்களை அடித்து 3ஆவது இடத்தில் இருக்கிறார். விரேந்தர் சேவாக் 3164 பந்துகளில் இந்த ரன்களை அடித்து, 4ஆவது இடத்தில் உள்ளார்.இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் பௌலர் கரோட்டி 10 ஓவர்களில் 76 ரன்களை விட்டுக்கொடுத்தாலும் 4 விக்கெட்களைகைப்பற்றி அசத்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான், 8 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். பிலால் ஷமி, 8.5 ஓவர்களில் 90 ரன்களை கசியவிட்டு சொதப்பினார்.

