
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்காக கர்நாடக அரசு போராடி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு மத்தியில் மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் பிரதமர் மோடியிடமும், ஜல்சக்தி மந்திரி சி. ஆர். பட்டேலிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில் தான், தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நாளை தனித் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய இருக்கிறார்.காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்குத்தான் அதிகளவு பலன் கிடைக்கும். எனவே, தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா அரசு விருப்பம் தெரிவிப்பதாக கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
