52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
திமுகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்: என்ன காரணம்? – உடைத்து பேசிய ஶ்ரீநிதி

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின்பாக கூட்டணி மாறுவது, கட்சி தாவுவது உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.குறிப்பாக தற்போதைய ஆளுங்கட்சியாக இருக்கும் தமிழக வெற்றி கழகத்தில் அதிகளவில் அதிமுகவில் இணைந்து கொண்டிருக்கின்றனர். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் சுவாரஸ்யங்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியவர், இன்றைய தினம் திமுகவில் இணைந்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பிற கட்சியை சார்ந்தவர்கள் பலரும் ஆளுங்கட்சியான தவெகவில் இணைவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே நேரம் எதிர்க்கட்சியை சார்ந்த திமுகவிலும் சிலர் இணைந்து கொண்டிருக்கின்றனர். இதனை சமீபத்தில் மு.க. ஸ்டாலினும் நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். பொதுவாக ஆட்சியில் உள்ள கட்சியில் பிரதிபலன் எதிர்பார்த்து இணைவதற்கு தான் அனைவரும் நினைப்பார்கள்.ஆனால் திமுகவில் கொள்கைக்காக இணைபவர்களை வரவேற்பதாக கூறி இருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் காங்கிரஸ் சார்பாக கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீநிதி, திமுகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி செயலாளராக இருந்த இவருக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதி போட்டியிட்ட நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சார்ந்த கிரிபிரசாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் தலைவர் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளரான ஸ்ரீநிதி திமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வின் போது கனிமொழி எம்பி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனிடையில் திமுகவில் இணைந்த பின்பக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிதி, இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும் என்று எங்களை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட வைத்தனர். ஆனால் கோஷ்டி பூசல் காரணமாக அறிவித்ததில் இருந்தே பிரச்சனை தான். இங்கிருக்கும் சில பெண் தலைவர்கள், இங்க யாரும் பெண்கள் வந்து விடக்கூடாது என நினைக்கிறார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள பெண் தலைவர் ஒருவர் அப்படி எண்ணுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், சில பேரின் சுயநலத்திற்காக அவசரமாக ஆட்சியில் பங்கு என தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து விட்டதாகவும் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸில் ஓரம்கட்டப்பட்டதால் இந்த முடிவினை நான் எடுத்தேன். இன்னைக்கு திராவிடம் என்பது எல்லாருக்கும் தேவை. அனைவரும் கவர்ச்சி அரசியலை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலையில் திராவிடம் என்பது அவசியம். அதிலும் பெண்கள் அரசியலுக்கு வரும்போது கண்டிப்பாக திராவிட சித்தாந்ததை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீநிதி.மேலும் பெயருக்கு பெரியார் படத்தை வைத்து இருப்பவர்கள் எல்லாம் மதச்சார்பற்ற கூட்டணி என சொல்லிக் கொள்ள முடியாது. உண்மையில் சித்தாந்த ரீதியாக செயல்பட வேண்டும். அப்படி திமுக தான் அனைவரையும் வழிநடத்தி செல்கிறது எனவும் கூறியுள்ளார். முன்னதாக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு ஸ்ரீநிதி கடுமையான எதிர்வினையாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *