52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IND vs AFG – சோம்பேறியாக விளையாடிய இந்திய வீரரை, திட்டிதீர்த்த கம்பீர்? அணி மீட்டிங்கில் ஷாக்

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று ஒருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில் இத்தொடரை வென்றுவிட்டது.2ஆவது போட்டியில் அபாரம்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியில், ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து அசத்தினார்கள். இருவரும் இணைந்து, 140 பந்துகளில் 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் 14 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 125 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 110 பந்துகளில் 22 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 154 ரன்களையும் அடித்தனர்.கம்பீர் அதிருப்தி: இந்நிலையில், இப்போட்டியில் இஷான் கிஷன் விளையாடிய விதம் குறித்து, அணி மீட்டிங்கில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.என்ன நடந்தது? இஷான் கிஷன் சதம் அடித்தப் பிறகு, அனைத்து பந்துகளையும் தூக்கியடிக்க முற்பட்டார். குறிப்பாக, கடைசி நேரத்தில் சோர்வுடன் விளையாடி, ஒத்த கையில் மட்டுமே பந்துகளை தூக்கியடிக்க ஆரம்பித்தார். அப்படி விளையாடி, தொடர்ந்து இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்தி இஷான் கிஷன், மூன்றாவது பந்தையும் ஒத்த கையில் தூக்கியடித்தார். அந்த பந்து கேட்ச் ஆனது. இதுதான், தற்போது கம்பீரின் கோபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.இதுகுறித்து அணி மீட்டிங்கில் பேசிய கம்பீர், ‘‘இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆட்டம், வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இருப்பினும், கிஷன் அவுட் ஆன விதம் எனக்கு கோபத்தைதான் ஏற்படுத்தியது. சோர்வாக இருந்தால், களத்திற்குள் பிசியோவை அழைத்து, அதனை சரி செய்யும் வேலையை செய்திருக்க வேண்டும் அல்லது ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, ஏன் ஒத்த கையில் ஆடி, அவுட் ஆக வேண்டும்? இது நல்ல பழக்கம் கிடையாது’’‘‘நீண்ட காலத்திற்கு பிறகு, மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளீர்கள். அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்திய அணியில், யாருக்கான இடமும் நிரந்தம் கிடையாது. மீண்டும் இதேபோன்ற தவறை செய்தால், அடுத்து அணியில் எப்படி, தொடர்ச்சியாக விளையாட வைக்க முடியும்? இது சாதாரண தவறு கிடையாது. இந்திய அணிக்காக விளையாட வந்துவிட்டால், கடைசிவரை முழு அற்பணிப்பு இருக்க வேண்டும். இப்படி, சோம்பேறியாக ஆடினால், இந்திய அணியை அவமதிக்கும் செயல்’’ என கம்பீர், இஷான் கிஷனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இஷான் கிஷன் இடம் உறுதியாகவில்லை: இந்திய ஒருநாள் அணியில், தற்போது இஷான் கிஷனின் இடம் உறுதியாகவில்லை. விராட் கோலி காயம் காரணமாக அவதிப்படுவதால், மிடில் வரிசையில், இஷான் கிஷனுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவேளை, மீண்டும் கோலி வந்துவிட்டால், கிஷனுக்கு பிளேயிங் 11 இடம் கிடைக்காது. இந்த சமயத்தில், இஷான் கிஷன், கம்பீரிடம் இப்படி அதிருப்தியை சம்பாதித்துள்ளார்.இருப்பினும், கிஷன் தற்போது 125 ரன்களை அடித்திருப்பதால், அவருக்கு வாய்ப்பு சற்று அதிகமாகி உள்ளது. தொடர்ந்து இதேபோல் சில பெரிய ஸ்கோர்களை அடித்துவிட்டால், கே. எல். ராகுலுக்கு மாற்றாக முழுநேர விக்கெட் கீப்பராக இஷான் கிஷனுக்கு முழுநேர விக்கெட் கீப்பர் இடத்தை கொடுக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *