52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அமெரிக்கா – ஈரான் போருக்கு எண்ட் கார்டு: அமைதிக்கு நான் கேரண்டி – கையெழுத்து போட்ட தலைவர்கள்..

உலகெங்கிலும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் ஆகியோர் கையெழுத்திட்டனர். அவர்களைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிக்கு உத்தரவாதம் கொடுக்கும் நபராக இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் ஈவியன்-லெஸ்-பெயின்ஸ் நகரில் ஜூன் 15 முதல் ஜூன் 17 வரை நடைபெற்ற 52வது ஜி7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் கலந்துக் கொண்டார். ஜூன் 17 ஆம் தேதி உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, அன்று இரவே வெர்சாய் அரண்மனையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்றார். அப்போது, தான் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். ​​ இடுவார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.இப்படியான சூழ்நிலையில், ஒருநாளுக்கு முன்பாகவே டிரம்ப் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டார். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சிறிது நேரத்திலேயே, செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஈரான் இந்த ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்படும் என்று எச்சரித்தார். ஆனால், அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். மேலும், நிச்சயம் ஒப்பந்தத்தை மதித்து நடப்பார்கள் என்று நம்புவதாக டிரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பான காணொளியை வெள்ளை மாளிகை வெளியிட்டு இருந்தது.அவரைத் தொடர்ந்து, ஈரான் அதிபரான மசூத் பெஷெஷ்கியனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகமும், பெஷெஷ்கியன் கையொப்பமிடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டது. முன்னதாக இந்த ஆவணத்தில் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே. டி. வேன்ஸ் மற்றும் ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிஃபாப் ஆகியோர் முதலில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டனர். பின்னர், நேற்றைய தினம் இரு அதிபர்களாலும் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதை அடுத்து, அமெரிக்க - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டது.அவர்களை தொடர்ந்து இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் அமைதிக்கு உத்தரவாதம் கொடுக்கும் நபராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கையெழுத்திட்டார். ராஜதந்திரத்தின் மீதான டிரம்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அமைதியான தீர்வுக்கான விருப்பமும், பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் போர் விளைவுகளுக்கு வழிவகுத்திருக்கக்கூடிய ஒரு மோதலை மீண்டும் ஒருமுறை முடிவுக்குக் கொண்டுவர உதவியுள்ளன என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து உள்ளார்.இதனையடுத்து, அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தாகியுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐநா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேசமயம், அமைதி ஒப்பந்தம் மட்டுமே தற்போது கையெழுத்தாகி உள்ள நிலையில், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக 60 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆன பிறகு உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட முடியும் என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *