52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தமிழக அரசின் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் – கர்நாடகாவின் ரியாக்ஷன் என்ன?

, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ச்சியான சட்ட மற்றும் அரசியல் மோதல்களை ஏற்படுத்தி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், இன்றைய தினம் (19 ஜூன் 2026) முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானங்களை கொண்டுவந்தார்.அந்த தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பதிலளித்து இருக்கிறார். அதில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தமாதிரியான நிலைபாட்டில் இருக்கிறது என்பதை தெளிவாக காண்பித்துள்ளது.தமிழ்நாடு அரசு விரும்பும் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முழு சுதந்திரம் இருக்கிறது. எனவே, என்ன தீர்மானங்களை வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளட்டும். அதை கவனிப்பது கர்நாடக அரசின் வேலை கிடையாது. அதுமட்டுமல்லாமல், இந்த தீர்மானம் கர்நாடகாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் கடலுக்கு செல்லும் உபரியாக செல்லும் நீரை மட்டுமே சேமித்து, அதை கர்நாடக மக்களுக்கு பயன்படுத்த கர்நாடகா அரசு முயற்சி செய்கிறதே தவிர, யாருடைய உரிமையையும் பறிக்க முயலவில்லை. ஏற்கனவே இதற்கு உச்சநீதிமன்றத்தால் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான உத்தரவும் கர்நாடகா அரசிடம் இருக்கிறது.ஆகையால், தமிழ்நாடு அரசு விரும்பம் இருந்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம். அதன் மூலமே இதற்கு ஒரு தீர்வை கொண்டுவரலாம். மேலும், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள கர்நாடகா தயாராகவே உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன் மூலமாக, கர்நாடகா கடைசி வரை மேகதாது அணை கட்டும் திட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க தயாராக இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே, கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற முயலும்போதெல்லாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றி இருக்கிறது.அப்படி இருந்தும், கர்நாடகா அரசு மேகதாது அணைக்கு ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்ட அறிக்கையை தயாரித்து, அதை மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்து விட்டது. மேலும், அதற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் பிரதமர் மோடியிடம் கோரிக்கையும் வைத்துவிட்டார். எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தீர்மானத்தை தாண்டி சட்ட ரீதியாகவும் வலிமை காட்ட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *