52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
SL A vs AFG A – 322 அடித்த இலங்கை ஏ அணி: இந்திய ஏ-வை வெளியேற்ற ஆப்கான் எப்படி வெல்ல வேண்டும்?

இலங்கையில் நடைபெற்று வரும் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்திய ஏ அணி 4 போட்டிகளில் விளையாடி, இலங்கை ஏ அணிக்கு எதிராக ஒரு தோல்வி, ஒரு வெற்றி, ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக ஒரு தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.இப்படி, 4 போட்டிகளில் 4 புள்ளிகள், +0.797 நெட் ரன்ரேட்டை பெற்று, இந்திய ஏ அணி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இலங்கை ஏ அணி, 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று, +0.494 நெட் ரன்ரேட்டை பெற்று 2ஆவது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகளில் ஒரு வெற்றியைப் பெற்று, -1.983 நெட் ரன்ரேட்டை பெற்று, 3ஆவது இடத்தில் இருக்கிறது.பைனலில் மோதும் அணிகள் எது எது ? இன்றைய இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ இடையிலான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், இந்தியா ஏ, இலங்கை ஏ அணிகளைப் போலவே 4 புள்ளிகளை பெற முடியும். இதனால், நெட் ரன்ரேட்தான் பைனலுக்கான இடத்தை தீர்மானிக்கும். இந்திய ஏ அணி, அதிக நெட் ரேட்டை வைத்திருப்பதால், பைனல் இடம் உறுதியாகிவிட்டது.இந்நிலையில், கடைசி லீக் போட்டியில், முதலில் களமிறங்கிய இலங்கை ஏ அணி, 50 ஓவர்களில் 322/8 ரன்களை குவித்தது. இதனால், ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு பைனல் வாய்ப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது. ஆப்கானிஸ்தான் ஏ அணி, 25 ஓவர்களில் 323 ரன்களை பெற்று வென்றால்தான், பைனலுக்கு முன்னேற முடியும் என்பதால், இறுதிப் போட்டியில் இலங்கை ஏ மற்றும் இந்தியா ஏ அணிகள் மோதுவது உறுதியாகிவிட்டது.இறுதிப் போட்டி, வரும் ஜூன் 21ஆம் தேதி தாம்புலாவில் நடைபெறும். இப்போட்டி, இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கும்.ஸ்கோர் விபரம்: கடைசி லீக் போட்டியில், முதலில் களமிறங்கிய இலங்கை ஏ அணியில், ஓபனர் அவிக்‌ஷா பெர்ணான்டோ சிறப்பாக விளையாடி, 97 பந்துகளில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 110 ரன்களை குவித்து அசத்தினார். மற்றொரு ஓபனர், டிக்வெல்லா 54 பந்துகளில் 12 பவுண்டரி உட்பட 66 ரன்களை சேர்த்தார். நவனிது பெர்ணான்டோ 70 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 45 ரன்களை அடித்தார். இப்படி, முதல் 3 பேட்டர்களும் சேர்ந்து அபாரமாக செயல்பட்டு ரன்களை குவித்து அசத்தியதால், துவக்கத்திலேயே ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.இறுதிக் கட்டத்தில், ரவிந்து பெர்ணான்டோ 18 பந்துகில் 25 ரன்களையும், வனுஜா ஷஹான் 16 பந்தில் 19 ரன்களையும் எடுத்ததால், இலங்கை ஏ அணி, 50 ஓவர்களில் 322/8 ரன்களை குவித்து அசத்தியது.ஆப்கானிஸ்தான் பௌலர்கள், 20 ஒயிட் ரன்களை வாரி வழங்கினார்கள். ஆப்கானிஸ்தான் பௌலர், தவோத்ஜாய் 10 ஓவர்களில் 60 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். சபி, 10 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *