
தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இதனை என விமர்சனம் செய்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் . தொடர்ச்சியாக இந்த விமர்சனத்தை அவர் வைத்து வருவது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதே நேரம் தவெகவினர் தரப்பில் இருந்து சோஃபா மாடல் அரசு என்பதற்கு பெரியளவில் பதிலடி கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள , சோஃபா மாடல் அரசு என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.தவெக புதிதாக ஆட்சி அமைத்து ஒரு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியான திமுக தவெக அரசுடைய செயல்பாடுகள் குறித்தான கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளன. மேலும் அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளும் தமிழக வெற்றி கழகத்தை விமர்சிக்க துவங்கியுள்ளன. அதே நேரம் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகள் ஒரு மாதம் மட்டும் தானே ஆகியுள்ளது. இன்னும் கால அவகாசம் தர வேண்டும். போக போகத்தான் இந்த அரசு எப்படி செயல்படுகிறது என்பது பற்றி தெரிய வரும் என கூறி வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த அமைச்சர் வன்னி அரசு தவெகவின் செயல்பாடுகள் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.அதாவது, முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. அவர் பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் எதற்கும் வாய் திறப்பது இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியை சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் வாயை திறங்க சிஎம் என கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இந்நிலையில் முதல்வர் எதைப்பற்றியும் பேசாமல் இருப்பது குறித்து நேர்காணலில் வன்னி அரசு கூறும் போது, பதில் சொல்வதை விட செயலில் காட்டுகிறார் விஜய். செயல் வடிவத்தில் ஒவ்வொன்றையும் அவர் முன்னெடுக்கிறார் என்று நான் பார்க்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார். அதோடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சோஃபா மாடல் அரசு என விமர்சிப்பது குறித்து வன்னி அரசு பேசுகையில் இது சோஃபா மாடல் அரசு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும இல்லை என்றார்.உதயநிதி ஸ்டாலின் எந்த அர்த்தத்தில் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் நான் பார்ப்பது S - Social Justice, O - Organised Action, F - Freedom, A - Anti Corruption & Caste என்பதே Sofa-வுக்கான அர்த்தமாக பார்ப்பதாக வித்தியாசமான விளக்கத்தை அளித்துள்ளார் வன்னி அரசு. தொடர்ந்தும் பேசிய அவர், இந்த வகையில் சோஃபா மாடல் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொல்வதை நாங்கள் ஆமோதிக்கிறோம். அவர் பாராட்டுவதாகவே எடுத்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார். அதோடு திமுக, தவெக ஆட்சி இடையில் எந்த விதமான வித்தியாசமும் கிடையாது.கொள்கை அடிப்படையில் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது என தவெக அரசின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தொடர்வதற்கு விசிக தலைவர் திருமாவளவன் முக்கியமான காரணம். அவர் ஒரு கிங் மேக்கர் எனவும் பேசியுள்ளார் வன்னி அரசு. அவருடைய இந்த நேர்காணல் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
