
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் 2026 போன்ற தொடர்களில் ஆட முடியவில்லை.பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஹர்ஷித் ராணா, ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற பிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், உடனே ஹர்ஷித் ராணாவை சேர்த்தனர். பெங்களூரில் இருந்து, சென்னைக்கு உடனே புறப்பட்டு சென்றார்.இப்படி, கடைசி நேரத்தில் ஹர்ஷித் ராணாவை சேர்த்திருப்பதால், ராணாவுக்கு பிளேயிங் 11-ல் இடம் இடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராணாவை பிளேயிங் 11-ல் சேர்க்கவில்லை. பிறகு ஏன், ராணாவை திடீரென்று உடனே 3ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.பிசிசிஐ விளக்கம் இதோ: இந்நிலையில், ராணாவை மூன்றாவது போட்டியில் ஏன் சேர்க்கவில்லை என்பது குறித்து அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்செத் பேசியுள்ளார். அதில், ‘‘பிளேயிங் 11-ல் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஹர்ஷித் ராணாவை அணியில் சேர்க்கவில்லை. அடுத்த 6 வாரங்களுக்கு, தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்கள் இருக்கிறது’’‘‘ஹர்ஷித் ராணாவை திடீரென்று அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் ஆட உள்ளார். அதற்குமுன், பயிற்சிக்காக மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சேர்த்துள்ளோம். இதனால்தான், அவரால் பிளேயிங் 11-ல் ஆட முடியவில்லை’’ எனத் தெரிவித்தார்.திறமையை நிரூபிக்க வேண்டும்: ஹர்ஷித் ராணா, மூன்று பார்மெட்களிலும் படுமோசமாக சொதப்பி வருகிறார். டெஸ்ட் பார்மெட்டில் 4.51 எகனாமியில் பந்துவீசும் ஹர்ஷித் ராணா, ஒருநாள் பார்மெட்டில் 6.22 எகனாமியில் பந்துவீசுகிறார். மேலும், டி20 பார்மெட்டில் 10.61 எகனாமியில் பந்துவீசுகிறார். இது, மிகமிக மோசமான பந்துவீச்சாகும்.இதனால், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஹர்ஷித் ராணா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் அபாரமாக பந்துவீசி, திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். காரணம், பிரின்ஸ் யாதவ், குர்நூர் பிரார் போன்றவர்கள் அபாரமாக பந்துவீசி வருகிறார்கள். இதனால், இந்திய அணியில், தற்போது வேகப்பந்து வீச்சாளர்கள் இடையில் பலத்த போட்டி ஏற்பட ஆரம்பித்துள்ளது.ஒருவேளை, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களிலும் ஹர்ஷித் ராணா படுமோசமாக பந்துவீசினால், அடுத்து இவரை அணியில் சேர்த்தால், கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழும். இதனால், அந்த இரண்டு தொடர்களிலும் அபாரமாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில், ராணா இருக்கிறார்.அதனால்தான், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே ஹர்ஷித் ராணாவை, கடைசி நேரத்தில் சேர்த்து, அணியின் சூழலுக்கு பழக வைத்துள்ளனர். இப்படி, ராணாவுக்கு பெரிய பெரிய சலுகைகள் கிடைக்கிறது. இதனையெல்லாம் பயன்படுத்தி அவர் அயர்லாந்து தொடரில் நிச்சயம் மாஸ் காட்டியாக வேண்டும்.இந்தியா, அயர்லாந்து இடையிலான 2 டி20 போட்டிகள், வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்பது உறிப்பிடத்தக்கது.
