52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IND vs AFG – அதிவிரைவாக 4 விக்கெட்கள்: ரோஹித், பிரசித் கிருஷ்ணா முரட்டு ரெக்கார்ட்: புள்ளி விபரம்

சென்னையில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், பிரசித் கிருஷ்ணா தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி, அடுத்தடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பவர் பிளே முடிவதற்குள்ளே 4 விக்கெட்களை எடுத்தார்.ஆட்டத்தின் 2ஆவது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, முதல் பந்திலேயே, குர்பாஸ் 5 (7) விக்கெட்டை எடுத்தார். அடுத்து, ஆட்டத்தின் 6ஆவது ஓவரில், ரஹ்மத் ஷா 5 (15) விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா எடுத்துக் கொடுத்து அசத்தினார். அடுத்து, 8ஆவது ஓவரில் இப்ராஹிம் ஹோர்டன் 5 (15) விக்கெட்டை பிரசித் கிருஷ்ணாவால் எடுக்க முடிந்தது.இந்த மூன்று விக்கெட்களும், சொல்லி வைத்தார்போல் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில், ஸ்லிப் திசையில் ரோஹித் சர்மா கேட்ச் எடுத்தார். பிறகு, 10ஆவது ஓவரில், ரசூலி 1 (5) விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். ஷ்ரேயஸ் ஐயர்தான் கேட்ச் பிடித்தார்.: ஒருநாள் பார்மெட்டில், இந்திய அணிக்காக முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்களை கைப்பற்றிய பௌலர்கள் லிஸ்டில், பிரசித் கிருஷ்ணா இணைந்துள்ளார். 2023ஆம் ஆண்டில், இலங்கைக்கு எதிராக முகமது சிராஜ் 5 விக்கெட்களை எடுத்தார். மற்ற எந்த இந்திய பௌலர்களும், ஒருநாள் பார்மெட்டில், முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்களை எடுத்தது கிடையாது.ஐவகல் ஶ்ரீநாத், புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர், முதல் 10 ஓவர்களில் தலா 4 விக்கெட்களை எடுத்துள்ள நிலையில், தற்போது இந்த லிஸ்டில் பிரசித் கிருஷ்ணா இணைந்துள்ளார்.ரோஹித் சர்மாவும் சாதனை: முதல் மூன்று விக்கெட்களையும், கேட்ச் எடுத்த இந்திய பௌலர்கள் லிஸ்டில், ரோஹித் சர்மா இணைந்துள்ளார். 2002-ல் சௌரப் கங்குலி, 2011ஆம் ஆண்டில் மனோஜ் திவாரி, 2013ஆம் ஆண்டில், சுரேஷ் ரெய்னா ஆகியோர் முதல் மூன்று விக்கெட்களை கேட்ச் பிடித்து சாதனை படைத்த நிலையில், தற்போது ரோஹித் சர்மா இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.அதிரடி கம்பேக்: அதன்பிறகு, ஆப்கானிஸ்தான் அணி அதிரடி கம்பேக்கை கொடுத்தது. 9.2 ஓவர்களில் 36/4 என இருந்த ஆப்கானிஸ்தான் அணி, அதன்பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்தது. ஹஸ்மதுல்லா மற்றும் அஜ்மதுல்லா ஒமர்ஜாய் ஆகியோர் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்கள்.விமர்சனம் இருந்தது: பிரசித் கிருஷ்ணா தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசுகிறார். அவரால், பந்துகளை சிறப்பான முறையில் ஸ்விங் செய்ய முடியவில்லை என்ற விமர்சனம் இருந்தது. இந்நிலையில், பிரசித் கிருஷ்ணாவை ஒருநாள் பார்மெட்டில் இருந்து நீக்கி, டெஸ்டில் மட்டும் விளையாட வைக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில், பிரசித் கிருஷ்ணா தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி, தனது திறமையை நிரூபித்துள்ளார்.குறிப்பாக, பவர் பிளேவில் ஷார்ட் பால்களை வீசுவதற்கு பதில், குட் லெந்தில் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசினார். இதனை கணிக்க முடியாமல் தடுமாறிதான், ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இங்கிலாந்து ஒருநாள் தொடரிலும், பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டால், அடுத்து ஒருநாள் பார்மெட்டில், பிரசித் கிருஷ்ணா இடம் உறுதியாகிவிடும் எனக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *