52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IND vs IRE 1st T20 – டாஸ் வென்றது இந்திய அணி: சூர்யவன்ஷிக்கு இடமில்லை, என்ன காரணம்? ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம்

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.டாஸ் வென்றப் பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ''முதலில் பந்துவீச விரும்புகிறோம். பெல்பெஸ்ட் மைதானத்தில், முதல் முறையாக விளையாடுகிறோம். பிட்ச் எப்படி செயல்படும் என்பது எங்களுக்கு தெரியாது. இதனால்தான், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளோம். தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடுவதுதான் எங்களது திட்டம். இன்று வைபவ் சூர்யவன்ஷி விளையாட மாட்டார்'' எனக் கூறினார்.சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை எனக் கேட்டபோது, ''அவருக்கான நேரம் வரும்போது, நிச்சயம் களமிறக்குவோம். தற்போது, நாங்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டருடன் விளையாட முடிவு செய்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.இன்று வைபவ் சூர்யவன்ஷி விளயாடியிருந்தால், இந்திய அணிக்காக 15 வயதிலேயே அறிமுகம் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருப்பார். அது இன்று நடக்கவில்லை.: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.பிட்ச் ரிப்போர்ட்: பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், இந்திய அணியில், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ளனர்.அயர்லாந்து அணி பிளேயிங் 11 - டிம் டெக்டர், ராஸ் அடைர், ஹேரி டெக்டர், லோர்கன் டெக்டர் (கேப்டன்), பெஞ்சமின் கிலிட்ஜ், காரேத் டெலானி, ஜார்ஜ் டக்ரீல், லியான் மெக்கர்தி, மேத்யூ ஹெம்ரைஸ், ஜெய் மோந்த்ரா, மேத்யூ ஹோலாந்த்.இந்தியா, அயர்லாந்து ஆகிய அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 8 முறையும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடைசியாக, இரு அணிகளும், டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் மோதிய நிலையில், அப்போது, இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.போட்டி நடைபெறும் பெல்பிஸ்ட் மைதானத்தில், இதற்குமுன் இந்திய அணி, ஒருநாள் பார்மெட்டில் மட்டுமே ஆடியிருக்கிறது. அதுவும், 2007ஆம் ஆண்டில்தான். அன்று நடைபெற்ற போட்டியில், தற்போதைய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், 80 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர்: அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர், 2028ஆம் ஆண்டில்தான் நடைபெறவுள்ளது. இன்னமும் 2 வருடங்கள் இருப்பதால், தற்போது நடைபெறும் இந்த டி20 தொடர், பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாததாக தான் இருக்கிறது. இதனால், அயர்லாந்து டி20 தொடரில், சூர்யவன்ஷியை களமிறக்கியிருக்கலாம். ஆனால், அவருக்கான நேரம் வரும்போதுதான் விளையாட வைக்க முடியும் என கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துவிட்டார்.இதனால், அடுத்த போட்டியிலும் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் எனக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *