ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங் பேச்சு வார்த்தையில் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குறித்துள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை கொடுத்துவிட்டு மாற்றாக ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே ஆகியோரை கொடுக்க முன் வந்த நிலையில், சிஎஸ்க நிர்வாகம், துபே மற்றும் நேதன் எல்லிஸை மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளதால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டது.சீனுக்குள் வந்த சன் ரைசர்ஸ்: இந்நிலையில், தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம், சென்னை சூப்பர் கிங்ஸை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒரு, தரமான வெளிநாட்டு ஸ்பின்னரும், ஒரு பினிஷரும் தேவைப்படுகிறார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ஷிவம் துபே, நூர் அகமதுவை கேட்டுள்ளனர். மாற்றாக, மிடில் வரிசை பேட்டர் ஹென்ட்ரி கிளாசனை விட்டுக்கொடுப்பதாக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆனால், இந்த டீலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்த டீலிங்கால், சன் ரைசர்ஸுக்கு மட்டுமே லாபம், சிஎஸ்கேவுக்கு ஒரு வகையில் கூட லாபம் கிடையாது. சிஎஸ்கே பேட்டிங் வரிசை தரமாக இருக்கும்போது, இந்த டீலிங் தேவையற்றது என சிஎஸ்கே நிர்வாகிகள் முடிவு செய்ததால், உடனே சன் ரைசர்ஸ் ஆஃபரை நிராகரித்துவிட்டனர்.வேண்டுமென்றால், கிளாசனை கொடுத்துவிட்டு, மாற்றாக பிரசாந்த் வீரரை வாங்கிக் கொள்ளுங்கள் என சிஎஸ்கே நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து யோசித்து முடிவு எடுத்து கூறுகிறோம் என சன் ரைசர்ஸ் பின் வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆர்சிபி டீல்: இதற்குமுன், ஆர்சிபி அணி நிர்வாகம், சிஎஸ்கேவிடம் டிரேடிங் டீல் பேசியது. அப்போது, டிவோல்ட் பிரேவிஸை கொடுத்துவிட்டு, டிம் டேவிட்டை வாங்கிக்கொள்ளுங்கள் என ஆர்சிபி நிர்வாகம் டீல் பேசியிருக்கிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்திய சிஎஸ்கே நிர்வாகம், இது தேவையற்ற டீலிங். இனி இதுகுறித்து பேச வேண்டாம் எனக் கூறி, ஆர்சிபியுடம் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டனர்.இப்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டீலிங் பேச வரும் அணிகளின், பெரும்பாலான டீல்கள், சிஎஸ்கேவுக்கு பாதகமாகவே இருக்கிறது.அசுதோஷ் சர்மா டீல்: டெல்லி கேபிடல்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் டிரேடிங் டீல் பேசியது. அப்போது, டிவோல்ட் பிரேவிஸை விட்டுக்கொடுத்தால், பினிஷர் அசுதோஷ் சர்மாவை விட்டுக்கொடுக்க தயார் என டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. தற்போது, இந்த டிரேடிங் டீல் குறித்து, சிஎஸ்கே நிர்வாகம் தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.ஹர்திக் பாண்டியா டிரேடிங் டீல், சிஎஸ்கேவுக்கு செட் ஆகாத காரணத்தினால், அதனை தற்போது நிறுத்திவிட்டனர். காரணம், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஆயுஷ் மாத்ரேதான் வேண்டும் என விடாப்பிடியாக கேட்டு நிற்கிறது. இதனால்தான், இந்த பேச்சு வார்த்தையை சிஎஸ்கே நிறுத்திக் கொண்டுள்ளது.மேலும், எக்காரணம் கொண்டும் டிரேடிங்கில் இளம் வீரர்களை அனுப்ப கூடாது என்பதிலும் சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. வெளிநாட்டு வீரர்களை, சீனியர் வீரர்களை வேண்டுமானால், நல்ல டிரேடிங்கிற்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

