அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.சூர்யவன்ஷிக்கு இடமில்லை: முதல் போட்டியில், தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது போட்டியில், பந்துவீச்சில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் சூர்யான்ஸ் செட்ஜை சேர்த்துள்ளனர். இந்த இரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.வைபவ் சூர்யவன்ஷிக்கு, இரண்டாவது போட்டியிலும் இடம் வழங்கப்படவில்லை. இப்போட்டி துவங்குவதற்கு முன்பு பேட்டிகொடுத்த இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கோடாக், ‘‘ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்து விட்டதற்காக, பேட்டர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. பேட்டர்களுக்கு உரிய ஆதரவை கொடுத்தாக வேண்டும்’’ எனக் கூறினார். இதனால், சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்காது எனக் கருதப்பட்டது. இந்நிலையில், அதேபோல், பிளேயிங் 11-ல் பிரின்ஸ் மற்றும் செட்ஜை மட்டுமே சேர்த்துள்ளனர்.இந்திய அணி பிளேயிங் 11 - அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, சூர்யான்ஸ் செட்ஜ், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.அயர்லாந்து அணி பிளேயிங் 11 - டிம் டெக்டர், ராஸ் அடைர், ஹேரி டெக்டர், லோர்கான் டக்கர் (கேப்டன்), பெஞ்சமின், கரித் டெலானி, டக்ரில், லியான் மெக்கர்தி, மேத்யூ ஹெம்ரியஸ், ஜெய் மந்தோரா, மேத்யூ ஹோலார்ட்.

