தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
இதையடுத்து, அவர்கள் அனைவரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். இதனால் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் மேலும் தீவிரமடைந்த நிலையில், தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.இந்தச் சூழலில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கரும் கட்சியை விட்டு விலகியுள்ளார். அதிமுக மாநிலம் முழுவதும் பின்னடைவை சந்தித்தபோதும்,யில் தனது செல்வாக்கை தக்கவைத்து வெற்றி பெற்றிருந்தார்.ஆனால், கட்சித் தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் முதலில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததுடன், பின்னர் அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்று அவர் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
தவெக எம்.எல்.ஏக்களிடம் திமுக மறைமுகமாக பேரம்
மறுப்புறம், தவெக எம்.எல்.ஏக்களிடம் திமுக மறைமுகமாக பேரம் பேசியதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்துகாவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் இதுவரை 9 பேரை கைதுசெய்துள்ளனர். இதன் பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக ஆளுங்ககட்சி குற்றம்ச்சாட்டி வருகிறது. மறுப்புறம் திமுக மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்ரவர்த்தி பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் சக்ரவர்த்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அ.தி.மு.க-வினர் ராஜினாமா செய்துவிட்டு தான் த.வெ.க-வில் இணைகின்றனர்: அ.தி.மு.க-வினர் த.வெ.க-வில் சேர்வதில் எந்த தவறும் இல்லை., சொந்தமாக, சுயமாக முடிவெடுத்து வேறு கட்சிக்கு செல்கிறார்கள்.
பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி
இதில் குதிரை பேரம் எதுவும் இல்லை. தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர், த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு காசு கொடுத்து நடத்தியது தான் குதிரை பேரம்.தி.மு.க-வினர் நடத்தியது பேரம் தொடர்பான பேச்சுவார்த்தை தான் சட்டப்படி குற்றம்.அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-விற்கு செல்வதில் எந்த தவறும் இல்லை.முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது என வெகுஜன மக்கள் கூறுகின்றனர்.த.வெ.க கூட்டணி ஆட்சியில் 50 நாட்களில் தமிழ்நாட்டில் ஊழலை குறைத்து முதலமைச்சர் விஜய் புரட்சி செய்திருக்கிறார் என்று கூறினார்.முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க கூட்டணி ஆட்சியில் வெறும் 50 நாட்களில் ஊழல் குறைந்துள்ளதாக மக்கள் கூறுவதாகப் பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய சூழலில் தி.மு.க மீது சுமத்தப்படும் இந்த பேரம் பேசும் புகார்கள், பொது மக்கள் மத்தியில் தி.மு.க மீதான அதிருப்தியை அதிகரிக்க வழிவகுக்கும்.இருப்பினும், இந்த விவகாரத்தில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று தி.மு.க தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

