52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
ENG vs IND – ‘எவ்வளவு வன்மம்’: வர்ணனையின் போது, சிஎஸ்கே வீரரை டார்கெட் செய்து விமர்சித்த தினேஷ் கார்த்திக்

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், இந்திய அணி, 20 ஓவர்களில் 189/7 ரன்களை எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனால், இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடவே முடியவில்லை. இறுதியில், மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.தினேஷ் கார்த்திக் வன்மம்: இப்போட்டியில், ஷிவம் துபே பேட்டிங் ஆடியபோது, வர்ண்னையாளர் குழுவில் தினேஷ் கார்த்திக்கும் இருந்தார். அப்போது, 18.2ஆவது பந்தில் ஷிவம் துபே சிக்ஸர் அடித்து, பிறகு அடுத்த பந்தில் சிங்கில் எடுத்தார். இதனைத் தொடர்ந்து, 18.4ஆவது பந்தை எதிர்கொண்ட ஹர்ஷித் ராணா, அடில் ரஷித் பந்தை கிரீஸை விட்டு வெளியே சென்று அடிக்க முற்பட்டபோது, விக்கெட் கீப்பர் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார்.அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த தினேஷ் கார்த்திக், ‘‘இது முழுக்க முழுக்க ஷிவம் துபேவின் தவறு. ஹர்ஷித் ராணா அவுட் ஆனது, ஷிவம் துபேவால்தான்’’ எனக் கூறினார்.இதனால் ஷாக் ஆன, சக வர்ணனையாளர் மைக்கேல் ஆதர்டன், ‘’எப்படி சொல்றீங்க? எதை வைத்து, ஷிவம் துபே மீது பழி போடுறிங்க?’’ எனக் கேட்டார்.இதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக், ‘’ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு, ஹர்ஷித் ராணாவுக்கு ஏன் ஸ்ட்ரைக்கை தர வேண்டும். அப்படி, ராணாவுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்ததால்தான், ராணா, பவுண்டரி அடிக்க முற்பட்டு அவுட் ஆகியுள்ளார்’’ எனத் தெரிவித்தார்.அதன்பிறகு பேசிய மைக்கேல் ஆதர்டன், ‘‘இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது ஷிவம் துபேவின் தவறு கிடையாது. இது ஹர்ஷித் ராணாவின் தவறு. ராணாவுக்கு பேட்டிங் ஆடும் திறமை இல்லை என்றால், அவர் சிங்கில் எடுத்து, துபேவுகுக ஸ்ட்ரைக்கை கொடுத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, அவர் ஏன் பவுண்டரி அடிக்க முற்பட்டிருக்க வேண்டும்?’’ எனக் கேட்டார்.அதன்பிறகு, தினேஷ் கார்த்திக், இந்த விவகாரம் குறித்துப் பேசவில்லை.ரசிகர்கள் அதிருப்தி: இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிஎஸ்கேவில், தினேஷ் கார்த்திக்கிற்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை. குறிப்பாக, கடைசி காலத்தை சிஎஸ்கேவில் கழிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக், ஓபனாக பேசியிருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கை சிஎஸ்கே கண்டுகொள்ளவே இல்லை.இதனால்தான், தற்போது, வர்ணனையில் சிஎஸ்கே வீரர் மீது வன்மத்தை கொட்டிருப்பதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.மற்றொரு சர்ச்சை: இப்போட்டியில், மற்றொரு சர்ச்சையும் ஏற்பட்டது. காரணம், அக்சர் படேல் இருந்தும், இவருக்கு முன்பே ஹர்ஷித் ராணாவை களமிறக்கினார்கள். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷித் ராணாவுக்கு ஏன் இப்படி, தொடர்ச்சியாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என ரசிகர்கள், அதிருப்தியுடன் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். மேலும், டி20 பார்மெட்டில், அக்சர் படேல் 130+ ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் நிலையில், அவரை புறக்கணித்திருப்பது, அவரது மன உறுதியை பாதிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.டி20 பார்மெட்டில், ஹர்ஷித் ராணா ஸ்ட்ரைக் ரேட், 114.67 என்ற மோசமான நிலையில்தான் இருக்கிறது. அப்படியிருக்கும் ராணாவுக்கு முன்னுரிமை கொடுத்து, அக்சர் படேலை பின்னுக்கு தள்ளியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *