டாஸ்மாக் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிக்கை
இந்த சூழலில் டாஸ்மாக் ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விஷயமாக கோரிக்கை நீடித்து வருகிறது. இதை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது சம்பள விவரத்தை எடுத்து பார்த்தால் அதிகபட்சமாக 17 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் சம்பள விவரம்
| ஊழியர்கள் | மாத சம்பளம் |
| கடை மேற்பார்வையாளர் | ரூ. 17,850 |
| விற்பனையாளர் | ரூ. 15,530 |
| உதவி விற்பனையாளர் | ரூ. 14,340 |
சம்பளம் டபுள் மடங்கு உயர்வு - தமிழக அரசு
இந்த சூழலில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 30 ரூபாயாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தற்போது வாங்கும் சம்பளத்தை காட்டிலும் அப்படியே இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிப்பது மட்டுமின்றி வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும் என்கின்றனர்.
ஓய்வு பெறும் வயது உயர்வு, பணி நிரந்தர நடவடிக்கை
- இதுதவிர ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தற்போது கடை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58. இதனை அரசு ஊழியர்களை போல 60ஆக உயர்த்தவுள்ளனர்.
- எல்லாவற்றுக்கும் மேலாக பிரதான கோரிக்கையாக இருப்பது பணி நிரந்தரம். ஏனெனில் ஒப்பந்த ஊழியர்களாக நியமித்து விட்டு, எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு சிக்கல் வரும் நிலை தான் காணப்படுகிறது.
- மதுவிலக்கு கொள்கையை செயல்படுத்தும் நோக்கில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே இதை நம்பி வருவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
- சில ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி விட்டு, திடீரென வேலை பறிபோனால் மாற்று வேலையை தேடுவது எளிதான காரியமல்ல. அது குடும்பம் நடத்துவோருக்கு பெரிய நெருக்கடியாக மாறிவிடும்.
- எனவே டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய், அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை
இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட முதலமைச்சர் விஜய், ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சம்பள உயர்வு, ஓய்வு பெறும் வயது உயர்வு, பணி நிரந்தரம் ஆகிய மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் ஊழியர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும். கமிஷன் வாங்காமல், முறைகேடுகள் தவிர்க்கும் வகையில் வேலை செய்வதற்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

