52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
ZIM vs BAN ODI – 141 ரன்களை மட்டும் அடித்து, மெகா வெற்றியைப் பெற்ற ஜிம்பாப்வே: வங்கதேசம் சொதப்பல்

ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி, முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ப்போட்டியில், தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய ஜிம்பாப்வே அணி, இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியைப் பெற்றது.இதனைத் தொடர்ந்து, தற்போது இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.ஜிம்பாப்வே இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் எந்த பேட்டரும் அரை சதம் அடிக்கவில்லை. ஓபனர்கள், பிரையன் பென்னெட் 17 (24), பென் கரண் 18 (19) ஆகியோர் சொதப்பிய நிலையில், இன்னோசன்ட் கையாவும் 26 (39) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.அதன்பிறகு, 4, 5, 6, 7, 8 ஆகிய இடங்களில் ஆடிய பேட்டர்கள் 3 ரன்னை கூட தாண்டவில்லை. இதனால், ஜிம்பாப்வே அணி, 19.5 ஓவர்களில் 70/8 என படுமோசமாக தடுமாறியது. ஜிம்பாப்வே அணியால், 100 ரன்னை கூட தாண்டுவது கடினம் எனக் கருதப்பட்டது.அந்த சமயத்தில், யாரும் எதிர்பார்க்காத கையில், 9ஆவது இட பேட்டர் நியூமேன் 51 பந்துகளில் 33 ரன்களையும், 10ஆவது இடத்தில் ஆடிய கேப்டன் ரிச்சர்ட் ங்கவரா 41 பந்தில் 27 ரன்களையும் சேர்த்து அசத்தியதால், ஜிம்பாப்வே அணி, 36.4 ஓவர்கள் முடிவில் 141/10 ரன்களை எடுத்தது.வங்கதேச அணி பௌலர், நஹித் ராணா, 10 ஓவர்களில் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார்.வங்கதேச அணி இன்னிங்ஸ்: சிறிய இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணி அபார வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜிம்பாப்வே பேட்டிங் ஆடியபோது, பிட்ச் கடைசி நேரத்தில், பேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தினால், வங்கதேச அணி, இந்த இலக்கை 20 ஓவர்களில் கூட துரத்தி, வெற்றியைப் பெற்றுவிடும் எனக் கருதப்பட்டது.ஆனால், வங்கதேச பேட்டர்கள், வங்கதேச வேகத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்தார்கள். ஓபனர்கள், டன்ஜித் ஹசன் 6 பந்தில் 8 ரன்களையும், சுமையா சர்கார் 10 பந்தில் 6 ரன்களையும் எடுத்து அவுட் ஆனார்கள். பிறகு, ஷான்டோ 7 பந்தில் 3 ரன்களை எடுத்து சொதப்பினார். இப்படி, முதல் மூன்று பேட்டர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகி, அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அடுத்து பார்ட்னர்ஷிப் அமைக்கும் முயற்சியில் 4, 5 ஆவது இட பேட்டர்கள் முயற்சித்தனர்.டௌகித் கிரிடோய் மற்றும் நுருல் ஹசன் இருவரும் இணைந்து, 88 பந்துகளில் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனனர். இதனால், வங்கதேச அணி, 19ஆவது ஓவர் சமயத்தில் 66/3 என நல்ல நிலையில் இருந்தது. அடுத்து, வெற்றிக்கு தேவை 76 ரன்கள்தான் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்கள் இருந்ததால், வங்கதேசம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், டௌகித் கிரிடோய் 25 (58), நுருல் ஹசன் 31 (44) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். பிறகு, மற்ற பேட்டர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகி, பெவிலியன் திரும்பினார்கள். இதனால், வங்கதேச அணி, 33.1 ஓவர்களில் 116/10 என ரன்களை எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *