52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது விஜய் சேதுபதி இல்ல, யார்னு பாருங்க: 2 பேருமே வேற லெவல்

பிக் பாஸ் புதுமை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 சீசன்கள் இதுவரை நடந்திருக்கிறது. கடந்த சில சீசன்களாக பார்வையாளர்கள் புலம்புவது அதிகமாகிவிட்டது. அதாவது போட்டியாளர்கள் என்கிற பெயரில் மிக்சர் பார்ட்டிகளாக அழைத்து வருகிறார்கள். போட்டியாளர்கள் தேர்வு டீமே சரியில்லை பிக் பாஸ் என்று கூறி வந்தார்கள் பார்வையாளர்கள்.இந்நிலையில் தான் ஓ அப்படியா சங்கதி, நீங்கள் வந்தால் பயங்கரமாக பெர்ஃபாமன்ஸ் செய்துவிடுவீர்களோ என்று பார்வையாளர்கள் அதாவது பொதுமக்களையே போட்டியாளர்களாக ஆக்க முடிவு செய்திருக்கிறார் பிக் பாஸ். இது தொடர்பான ப்ரொமோ வீடியோ வந்தது நினைவிருக்கலாம். அதனால் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியையும் அவர் தான் தொகுத்து வழங்குவார், ஹய்யா விஜய் சேதுபதியை பார்க்கப் போகிறோமே என பொதுமக்கள் குஷியானார்கள். 2 தொகுப்பாளர்கள்: அவர்களின் மகிழ்ச்சிக்கு ஆயுள் இல்லை. ஏனென்றால் பிக் பாஸ் தி காமன்மேன் ஷோவில் ஒரு டுவிஸ்ட் வைத்துவிட்டார்கள். அதாவது பொதுமக்கள் போட்டியாளர்களாக வரும் அந்த நிகழ்ச்சியை அல்ல மாறாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர் தான் தொகுத்து வழங்குவாராம்.மக்களே வாங்க, பிக் பாஸ் வீட்டுக்கு வாங்க என்று விஜய் சேதுபதி அழைத்த நிலையில் ஏராளமானோர் விண்ணப்பித்திருக்கிறார்களாம். இந்த காமன்மேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாயா கிருஷ்ணன் மற்றும் பிக் பாஸ் டைட்டிலை வென்ற முத்துக்குமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம். மாயா அல்லது முத்துக்குமரன் தொகுத்து வழங்கலாம் என்கிறார்கள். இல்லை என்றால் வித்தியாசமாக இருக்கட்டும் என இருவரையுமே வைத்து பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.மாயா, முத்து: தன் யூடியூப் சேனலில் மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது மாயா செய்ததை எல்லாம் பார்வையாளர்கள் இன்னும் மறக்கவில்லை. அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவரை தேர்வு செய்திருக்கிறார்கள். மேலும் முத்துக்குமரன் எப்படி பேசுவார் என்பது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கே தெரியும். அதனால் நிகழ்ச்சி தொகுப்பாளராக சரியான ஆள் தான் அவர்.பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சியை செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பப் போகிறார்களாம். அதில் சிறப்பாக செயல்படும் சிலரை தேர்வு செய்து பிக் பாஸ் 10வது சீசனுக்கு அனுப்புவார்களாம். 10வது சீசனில் பிரபலங்களுடன், இந்த காமன்மேன் ஆட்களும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறார்கள். காமன்மேன் ஷோ விபரம்: இத்தனை சீசன்களாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தவர்களை இந்த சீசனில் போட்டியாளராக்கிப் பார்க்கப் போகிறார்கள். சாதாரண ஆட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த காமன்மேன் நிகழ்ச்சி 25 எபிசோடுகள் வரை வருமாம்.இதெல்லாம் இருக்கட்டும் பிக் பாஸ், கடந்த சீசனை போன்று இந்த சீசனுக்கு சமூக வலைதள பிரபலங்களை இறக்கிவிட வேண்டாம். அவர்கள் ரொம்ப மோசம். பிக் பாஸ் வீட்டை ரீல்ஸ் செய்யும் இடமாக நினைத்து செயல்படுகிறார்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *