முதலமைச்சர் விஜய் கரூர் வருகை
இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற அவர்,அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூருக்கு சென்றார்.முதல்வர் விஜய்யின் வருகையொட்டி சாலையின் இருப்புறங்களிலும்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்த்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்ட 5,000 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்க்கு சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளி வாள் பரிசளித்தார். பின்னர் பேசியவர்,சேர மன்னனின் தலைநகராக விளங்கிய வரலாற்று சிறப்புமிக்க இந்த கரூர் மாநகருக்கு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கட்சியினுடைய தலைவராக வந்த தளபதி அவர்கள் இன்று கரூர் மண்ணிலே தமிழகத்தினுடைய முதலமைச்சராக வந்திருக்கிறார்.1972-ஆம் ஆண்டுஅவர்கள் அதிமுகவைத் தொடங்கியபோது விசில் அடிப்பவர்களை வைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியுமா? என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் 1977-இல் அவர் ஆட்சிக்கு வந்தபோது திரையுலகில் இருந்து வந்தவருக்கு ஆட்சி நடத்தத் தெரியுமா?' என்ற விமர்சனங்களையும் தாண்டி தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்து சாதனை படைத்ததைச் சுட்டிக்காட்டினார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் போல சரித்திரம் படைப்பார் விஜய்
அதேபோல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அன்பும், புரட்சித்தலைவி அம்மாவின் வீரமும் ஒன்றுசேர்ந்த தலைவராக விளங்கும் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களை இன்று தமிழகம் மட்டுமன்றி இந்தியாவே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்றார்.அதிமுகவில் நிரந்தரப் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராகவும் திகழும் தளபதி விஜய் அவர்கள் கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளார். பண பலமும்,அதிகார பலமும் இருந்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கணக்குப்போட்ட தீய சக்தியான திமுகவின் மனக்கோட்டையை இந்த இளைஞர் பட்டாளம் தகர்த்தெறிந்துள்ளது என்று அவர் சாடினார்.மேலும், தற்போதைய ஆட்சிக்கு முன்னால் பல சவால்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, கர்நாடகாவுடனான காவேரி நீர் பிரச்சனை மற்றும் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பற்றாக்குறை ஆகிய சவால்களைத் தகர்த்து, பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடக்கூடிய ஒரு நல்லாட்சியை முதலமைச்சர் விஜய் வழங்குவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்க்கு வைத்த கோரிக்கை என்ன?
இறுதியாக, கரூரில் நிலவும் முக்கியப் பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். 1963-ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 'இனாமொழிப்புச் சட்டம்' மூலம் கோயில் இனாம்ப நிலங்களில் உழுது வாழ்ந்த ஏழை எளிய மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், முதலமைச்சரும் ஏழை மக்களைச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கும் வகையில் அவர்களின் வீடுகளுக்குச் சீல் வைப்பது, காலி செய்வது போன்ற நில அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறிப்பாகக் கரூரில் இந்த அநீதி அதிகமாக நடந்துள்ளது. எனவே, லட்சக்கணக்கான ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், இந்த கோயில் இனாம்ப நிலப் பிரச்சனைக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் தனி கவனம் செலுத்தி உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

