52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
​திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டோமா? பதவிக்காக விஜயை புகழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை- மேடையில் சீறிய திருமாவளவன்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாக இருந்த நிலையில் 234 தொகுதிகளில் 59 இடங்களில் மட்டுமே திமுக தனித்து வெற்றி பெற்றது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்காக 29-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்தது. இதில் திமுக தலைமையிலான மதசார்பு முற்போக்கு கூட்டணி மொத்தம் 73 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டோமா?

இதனைத் தொடர்ந்து விஜயின் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்ததின் அடிப்படையில், விஜய் முதல்வராக பொறுப்பேற்றார்.இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பொறுப்புகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து , காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடுத்தடுத்து திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தது. இந்த சூழலில், திமுக கூட்டணியில் இருந்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் தவெகவுடன் கூட்டணி இல்லை திமுகவுடன் நட்புறவு உள்ளது என்று இரட்டை நிலைத்தன்மையுடன் பேசி வருகிறார். இருப்பினும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் திமுகவிலிருந்து கூட்டணி கட்சிகள் விலகுவதற்கு முக்கிய காரணங்களை எடுத்துரைத்துள்ளார்.அந்த கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது : கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அறிவித்திருந்தால் கூட்டணி கட்சிகளில் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவுக்காவது திருப்திகரமான முறையிலே தந்திருந்தால் விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அதைவிட இந்த கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேறி இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

சுதந்திரமாக சிந்திக்க விடுவதில்லை

தொடர்ந்து பேசியவர் இந்த கோணத்தில் இருந்து யாரும் சிந்திக்கவில்லை பார்க்கவில்லை. மாறாக திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறுகிறார்கள் கூட்டணி கட்சிகள் துரோகம் செய்வதற்கு என்ன தேவை இருக்கிறது. நாளைக்கு கூட அமைச்சரவை பதவியிலிருந்து வெளியேற முடியும். அதைத்தான் நான் சொன்னேன். அதில் எந்தவிதமான பிடிப்பும் இல்லை என்பதை சொல்வதற்காக தான் சொன்னேன். ஆனால் இங்கு இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள். இருக்கிற இடத்தில்விசுவாசமாக இரு என்கிறார்கள் நம்மை ஒரு அடிமையாகவே பார்க்கிறார்கள் சுதந்திரமாக சிந்திக்க விடுவதில்லை.

டிவிகே ஆட்சியில் இருந்தாலும் தவெக-வோடு கூட்டணி இல்லை

இங்கு இருந்தா இந்த கட்சிக்கு விசுவாசமாக இரு அங்கு இருந்தால் அந்த கட்சிக்கு விசுவாசமாக இரு.. இதற்கு என்ன பொருள் நீ சுதந்திரமாக சிந்திக்க கூடாது. சுதந்திரமாக முடிவெடுக்க கூடாது இது எந்த போக்கு. பதவி தான் முக்கியம் என்றால் அதனை தக்க வைக்கிற அணுகுமுறை களை தானே எடுப்பார்கள்.நாங்கள் டிவிகே கூட்டம் நீங்கள் இணைந்து விட்டோம் அமைச்சரவை பதவி பெற்று விட்டோம் இனி முதல்வர் விஜயை போற்றிக் கொண்டே இருப்போம் என்று ஒரு சராசரி நபர் அதை தானே யோசிப்பார். ஆனால் அதை தாண்டி பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்து இங்கு இயக்க வேண்டும் என்கின்ற பார்வையை திருமாவளவன் முன்வைக்கிறான் என்றால் இந்தப் பார்வையை நீங்கள் பாராட்ட வேண்டாமா? வரவேற்க வேண்டாமா? ஏன் ஒரு இணக்கமான போக்கை இல்லாமல் திருமாவளவன் இப்படி பேசி வருகிறார் என்றால் திமுக கூட்டணியில் மீண்டும் இணைய முயற்சி செய்கிறார் என்று கூறுகிறார்கள். திமுகவில் மீண்டும் ஒட்டிக் கொள்வதற்கான தேவை என்ன இருக்கிறது. இவை அனைத்தும் அர்த்தமில்லாத விமர்சனம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *