பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் சக்திவாய்ந்த ராணுவ கூட்டணியில், ஈரானும் இணைய வாய்ப்புள்ளதாக சர்வதேச அளவில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இந்த கூட்டணியில் இணைவதற்கு ஈரான் ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, “மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஈரானும் எகிப்தும் தவிர்க்க முடியாத சக்திகளாகும். எனவே, இந்த கூட்டணியில் வெறும் சாதாரண உறுப்பினராக நாங்கள் பங்கேற்க முடியாது. மாறாக, இணை நிறுவன உறுப்பினர்களாகவே (co-founding members) நாங்கள் இதில் பங்கேற்போம்” என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கூட்டணியின் கொள்கைகள் மற்றும் கையெழுத்திடப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை உருவாக்கும்போதே தங்களின் கருத்துகளும் யோசனைகளும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதே ஈரானின் முதன்மை கோரிக்கையாகும். ஈரானின் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ராணுவ அரசியல் சூழலில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.