நேபாள வெள்ளப்பெருக்கு: உரிய நேரத்தில் எச்சரிக்கத் தவறியதா சீனா? புதிய சர்ச்சை வெடித்தது!

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக சீனா மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை நேபாளத்திற்கு உரிய நேரத்தில் வழங்க சீனா தவறிவிட்டதா என்ற கேள்வி சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து நேபாள அதிகாரிகள் தெரிவிக்கையில், “இந்தக் கடுமையான வெள்ளத்திற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், இதுவரை வெள்ளப்பெருக்கிற்கான மூலக் காரணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் நிலையில் சீன தரப்பும் இல்லை. இந்தச் அசம்பாவிதம் நேபாள எல்லைக்குள் உருவானதா அல்லது திபெத் பகுதியை நோக்கி நிகழ்ந்ததா என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை” என்று கூறியுள்ளனர்.

எல்லை தாண்டிய நதிகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல்களை அண்டை நாடுகளுடன் உடனுக்குடன் பகிர்வது மிகவும் அத்தியாவசியமானது. இந்நிலையில், சீனா உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top